பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்', 'லட்சுமி வந்தாச்சு' போன்ற சீரியல்களில் நடித்து, சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வாணி போஜன்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தான் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அடித்தளம் அமைத்தது. அந்த வகையில் இவர் முதலில் அறிமுகமான சில படங்கள் தோல்வியை தழுவினாலும், அசோக் செல்வன் நடித்த 'மை கடவுளே' திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். இவர் நடித்த மீரா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகினார்.
மேலும் செய்திகள்: சல்மான் கான் பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர்..! முன்னாள் காதலியின் பகீர் குற்றச்சாட்டு!
Vani bhojan photos
இதைத்தொடர்ந்து லாக் அப், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், போன்ற படங்களில் நடித்த வாணி போஜன், தற்போது சுமார் 9 படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என கூறாமல், அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஒருபக்கம் நடிப்பில் படு பிசியாக நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம்... விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வியக்க வைக்கிறார். அந்த வகையில் அழகிய சேலையில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி போல், இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.