கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை முடிவு எடுத்தது ஏன்?.. போலீஸின் முதற்கட்ட விசாரணையில் வெளியான திடுக் தகவல்

First Published | Sep 10, 2022, 8:37 AM IST

Thoorigai Kabilan : பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகையின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியராக வலம் வருபவர் கபிலன். கடந்த 2001-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான் தில் படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார் கபிலன். அப்படத்தில் இடம்பெறும் உன் சமையல் அறையில் என்கிற பாடல் தான் கபிலன் எழுதிய முதல் பாடல். அப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது என்றால் அதற்கு கபிலனின் வரிகளும் ஒரு முக்கிய காரணம்.

முதல் பாடலிலேயே கவனம் ஈர்த்த கபிலனுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர், அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கவிஞராக வலம் வந்தார். இவர் கமலின் தசவதாரம் படத்தில் ஒரு சிரிய வேடத்தில் நடித்து தன்னுள் உள்ள நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார்.

Tap to resize

கவிஞர் கபிலனுக்கு தூரிகை என்கிற பெண் குழந்தையும் உள்ளார். தூரிகையை துணிச்சல் மிகுந்த பெண்ணாகவே வளர்த்து வந்துள்ளார் கபிலன். இவர் எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். இளம் வயதிலேயே வார இதழ் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். 28 வயதாகும் தூரிகை நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். துணிச்சல் மிகுந்த பெண்ணாக வலம் வந்த அவரா இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.

இதையும் படியுங்கள்... பிரபல இயக்குனரை அறிவில்லாதவன் என திட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் - வைரல் வீடியோ

தூரிகையின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தூரிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியது தான் அவரின் தற்கொலை முடிவுக்கு காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.

இதையடுத்து தூரிகையின் பெற்றோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் தூரிகை வேறு யாரையாவது காதலித்து வந்தாரா? அவரது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்களா என்கிற கோணத்திலும் போலீஸார் தங்களது அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... அழகின் தேவதையாய் மிளிரும் மிர்னாலினி ரவி...கோப்ரா நாயகியின் க்யூட் போட்டோஸ்

Latest Videos

click me!