பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை யார்..? என்ன செய்கிறார்... தற்கொலைக்கு என்ன காரணம்?

First Published Sep 9, 2022, 11:00 PM IST

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள, பாடலாசிரியர், கபிலனின் மகள் தூரிகை தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

புதுவையை பூர்வீகமாக கொண்ட, பாடலாசிரியர் கபிலன் கவிதை மற்றும் பாடல்கள் எழுதும் ஆர்வத்துடன், சென்னைக்கு வந்து, பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர், நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான, தில் படத்தில் இடம்பெற்ற 'உன் சமையல் அறையில்' பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான பாடல் வரிகளால், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். முதல் படத்திலேயே... இவரது வரிகள் பலரை முணுமுணுக்க வைத்ததை தொடர்ந்து, நரசிம்மா, அல்லி தந்த வானம், தவசி என அதே ஆண்டில் அடுத்தடுத்து 3 படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் குறிப்பாக இவர் பாடலாசிரியராக அறிமுகமான சில வருடங்களில் இவர் வரிகளில் வெளியான, சகலா கலா வல்லவனே... ஆல்தோட்ட பூபதி நான்னட.. ஆசை ஆசை இப்பொழுது, கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா போன்ற பாடல்கள் வேற லெவலுக்கு ஹிட் லிஸ்டில் இடம்பிடித்தது. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர், விரைவில் வரவிருக்கும் பாடங்களான... பிசாசு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். 

மேலும் செய்திகள்: Breaking:அதிர்ச்சி... கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை!
 

கபிலன் தற்போது  தன்னுடைய குடும்பத்தோடு சென்னை அரும்பாக்கம் ஏ.டி.எம் காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக, கபிலனின் மகள் தூரிகை, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தற்போது இவரது உடலை கைப்பற்றிய போலீசார்  உடல்கூறாய்வு பரிசோதனைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவரது மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... கேரளா புடவை கட்டி அழகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அவரது ரீல் மகள் அனிகா!

தூரிகை 27 வயதிலேயே, பிரபல ஆங்கில மேகஸீனில் எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருப்பது மட்டும் இன்றி... பெண்களுக்கான ஆன்லைன் இணையதள வார இதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
 

இந்த பத்திரிகையில் துவக்க விழாவின் போது பேசிய தூரிகை, பெண்ணாக இருப்பது தனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகத் தான் பெண்களை மையமாக வைத்து இந்த பத்திரிகையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தன்னுடைய இந்த இணையதளம், பெண்ணியம் பற்றிப் பேசுவதற்காகவோ, பெண்களுக்கு எதிராக நடக்கும் எதிர்மறைப் பக்கங்களை பற்றி பேசுவதற்காகவோ அல்ல. பெண்கள் பற்றிய அவர்களுடைய நேர்மறையான பக்கங்களை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகையை தொடங்கியதாக தெரிவித்தார். பெண்களை கொண்டாடவே இதை துவங்கியதாக தூரிகை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பாரதி ராஜா! எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே? வைரலாகும் புகைப்படம்!
 

மிகவும் பொறுப்பானவராகும், தைரியமான பெண்ணாகவும் இருக்கும் இவர் கோழை தனமாக தற்கொலை முடிவை எடுத்துள்ளாரா? என்பதே பலராலும் நம்ப முடியாத உண்மையாக உள்ளது. எனவே இவரது தற்கொலைக்கு உண்மை காரணம் குடும்ப பிரச்சனை என கூறப்படுவதா? வேறு ஏதாவதா? என்பது போலீசார் விசாரணைக்கு பின்பே தெரியவரும்.

click me!