நடிகர் அஜித் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் ஏகே 62. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் அண்மையில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அவர் ஒப்பந்தமான தகவலையும் இன்னும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் ஏகே 62 படத்தின் அறிவிப்பு எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
24
இந்த நிலையில், நேற்று மாலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது லைகா நிறுவனம். அதன்படி இன்று தாங்கள் தயாரிக்க உள்ள 24-வது படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்படும் என குறிப்பிட்டு இருந்தனர். அது எந்த படம் என்பதை அவர்கள் குறிப்பிடாமல் இருந்ததால், நிச்சயம் அது அஜித்தின் ஏகே 62 பர்ஸ்ட் லுக் ஆக தான் இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதன்படி இன்று காலை லைகா நிறுவனம் தங்களின் 24-வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஏகே 62 படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் தாங்கள் தயாரித்துள்ள சிறு பட்ஜெட் படமான ‘திருவின் குரல்’ என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக்கை தான் தற்போது வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்து அப்செட் ஆன அஜித் ரசிகர்கள் ஏகே 62 அப்டேட்டை வெளியிடுமாறு குரல் கொடுத்து வருகின்றனர்.
44
திருவின் குரல் திரைப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீசைய முறுக்கு படத்தின் நாயகி ஆத்மிகா நடித்திருக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தை ஹரீஷ் பிரபு இயக்கி உள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு கணேஷ் சிவா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர் அயலி, விலங்கு போன்ற வெப் தொடர்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் ஆவார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.