தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவரது நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் சூர்யா பல்வேறு கெட் அப்களில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சூர்யா மும்பையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார். அவருடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சூர்யா, அன்பும் மரியாதையும் என கேப்ஷன் கொடுத்துள்ளார். சூர்யா - சச்சின் சந்திப்பை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் இந்த அப்டேட் நம்ம லிஸ்ட்லயே இல்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எதற்காக சந்தித்து கொண்டார்கள் என்கிற விவரம் வெளியாகவில்லை.