Breaking: நாளை வெளியாகிறதா AK 62 பட அறிவிப்பு? லைகா வெளியிட்ட தகவலால் குஷியான ரசிகர்கள்!

First Published | Mar 1, 2023, 9:11 PM IST

நாளை முக்கிய தகவல் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளதை தொடர்ந்து, AK 62 படத்தின் அறிவிப்பு வெளியாகுமா? என ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
 

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்தது மட்டும் இன்றி வசூலிலும்,  உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தது.

இந்த படத்தை ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார். மூன்றாவது முறையாக எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டனில் அஜித் நடித்திருந்த 'துணிவு' படத்தில், மக்களின் பணங்கள் எப்படி சில கயவர்களால் திருடப்படுகிறது என்று சமூக கருத்தோடு இப்படம் வெளியாகி இருந்தது.

கொசுவலையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு... ஆடை பட அமலா பாலுக்கே டஃப் கொடுக்கும் மாளவிகா மோகனன்!

Tap to resize

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாவனி, அமீர், ஜான் கொக்கேன்,பிரேம், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 
 

இந்த படத்தை தொடர்ந்து தற்போது அஜித் தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி உள்ளார். ஏற்கனவே வெளியான தகவலின் படி ஏகே 62 படத்தின் பூஜை கடந்த வாரம் மிகவும் எளிமையாக போடப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லைகா நிறுவனம் நாளை காலை 10:30 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

நடிகர் ரவி மரியா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி பண மோசடி! நடிகர் காவல் நிலையத்தில் புகார்!

எனவே நாளை வெளியாக உள்ள அறிவிப்பு ஏகே 62 படத்தின் தகவலாக இருக்கலாம் என ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து, இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
 

அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்க இருந்த நிலையில் பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து தற்போது இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கம் உள்ளது உறுதியாகி உள்ளது. இதுவரை இயக்குனர் குறித்த தகவலை கூட தயாரிப்பு நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், நாளை இயக்குனர் மற்றும் படத்தின் டைட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்ணா... இல்லை தேவதையா? பளபளக்கும் உடையில் ஒரு தினுசாக போஸ் கொடுத்து... இளசுகளை இம்சிக்கும் பூஜா ஹெக்டே!
 

Latest Videos

click me!