கொசுவலையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு... ஆடை பட அமலா பாலுக்கே டஃப் கொடுக்கும் மாளவிகா மோகனன்!

First Published | Mar 1, 2023, 8:11 PM IST

நடிகை மாளவிகா மோகனன், ஆடை பட நாயகி அமலா பாலுக்கே டஃப் கொடுக்கும் விதமாக...கொசுவலை போன்ற உடையில்... உச்சகட்ட கவர்ச்சி காட்டிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
 

மலையாள பைங்கிளியான நடிகை மாளவிகா மோகனன் அறிமுகமானது மலையாள திரை உலகம் என்றாலும், இவரை மிகவும் பிரபலமாகியது தமிழ் திரையுலகம் தான். மாளவிகா மோகனன் தமிழில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'பேட்'ட படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் பூங்கொடி என்கிற கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
 

இதைத்தொடர்ந்து அதிரடியாக தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' படத்தில் இணைந்தார் மாளவிகா மோகனன். விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகள் பலரின் கனவாக இருந்தாலும், மாளவிகா மோகனுக்கு இந்த வாய்ப்பு மிக விரைவாகவே கிடைத்தது.

ஒடிடியில் வெளியான பின்னரும்... திரையரங்கில் 50-வது நாள் கொண்டாடும் விஜய்யின் வாரிசு!
 

Tap to resize

 தளபதியின் நாயகி என்பதால் , விஜய்யின் ரசிகர்கள் இவரை கொண்டாடினர். மேலும் அவ்வபோது அளவுக்கு அதிகமான கவர்ச்சியில் மாளவிகா மோகனன் வெளியிடும் போட்டோ ஷூட் புகைப்படங்களும், சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு இவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரிக்க செய்தது. அந்த வகையில் தற்போது மாளவிகா மோஹடன் ஆடை படத்தில் நடிகை அமலா பால் டிஷ்யூ பேப்பரை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு நடித்தது போல, கொசுவலை போன்ற ஆடையை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
 

மாளவிகா மோகனன் தமிழில் தனுசுக்கு ஜோடியாக நடித்த மாறன் திரைப்படம், ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை. எனவே கதை தேர்வில்  மிகவும் கவனமாக இருந்து வரும் மாளவிகா மோகனன், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பெண்ணா... இல்லை தேவதையா? பளபளக்கும் உடையில் ஒரு தினுசாக போஸ் கொடுத்து... இளசுகளை இம்சிக்கும் பூஜா ஹெக்டே!
 

அதேபோல் தமிழில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் கன்னட திரை உலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, KGF  பட பாணியில், தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் பற்றி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!