லவ் டுடே வசூலில் பாதிகூட கிடைக்கல... பரிதாப நிலையில் ‘காஃபி வித் காதல்’ - 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

First Published | Nov 8, 2022, 11:10 AM IST

சுந்தர் சி இயக்கியுள்ள ‘காஃபி வித் காதல்’ படத்தில் ஜீவா, மாளவிகா ஷர்மா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, ஜெய், அம்ரிதா ஐயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் இப்படம் மக்களை கவரவில்லை. 

தமிழ்நாட்டில் சிறு பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வரவேற்பு அளிப்பதில்லை, பெரிய பட்ஜெட் படங்களையே விரும்பி பார்க்கிறார்கள் என்கிற பேச்சு கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த படம் தான் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்படம் ரிலீசாகி இரண்டே நாட்களில் பட்ஜெட்டை விட டபுள் மடங்கு வசூல் ஈட்டிவிட்டது. இதற்கு காரணம் இப்படத்தின் கதையும், பிரதீப் இயக்கியுள்ள விதமும் தான். மக்கள் பட்ஜெட்டையோ, ஹீரோவையோ பார்ப்பதில்லை, நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தால் நிச்சயம் வரவேற்பு அளிப்பார்கள் என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு.

இதையும் படியுங்கள்... நயன் - விக்கி ஜோடி வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றது குறித்து நடிகை சமந்தா சொன்ன ‘நச்’ கருத்து

Tap to resize

லவ் டுடே திரைப்படம் வெளியான நான்கே நாட்களில் ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. மறுபுறம் இப்படத்திற்கு போட்டியாக ரிலீசான ‘காஃபி வித் காதல்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி உள்ளது. இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.5 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாம்.

லவ் டுடே படத்தோடு ஒப்பிடுகையில் அதன் வசூலில் பாதியைக் கூட இப்படத்தால் வசூலிக்க முடியவில்லை. சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா, மாளவிகா ஷர்மா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, ஜெய், அம்ரிதா ஐயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தும் இப்படம் மக்களை கவரவில்லை. இதற்கு காரணம் இப்படத்தில் குழப்பமான கதையும், சொதப்பலான காமெடியும் தான்.

இதையும் படியுங்கள்... சித்தார்த் உடன் நடிக்க சான்ஸ் கிடைச்சா... அவருடன் படுக்கையை பகிரவும் தயார் - நடிகையின் பளீச் பேச்சால் பரபரப்பு

Latest Videos

click me!