சித்தார்த் உடன் நடிக்க சான்ஸ் கிடைச்சா... அவருடன் படுக்கையை பகிரவும் தயார் - நடிகையின் பளீச் பேச்சால் பரபரப்பு

Published : Nov 08, 2022, 09:18 AM IST

நடிகர் சித்தார்த் உடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக, அவருடன் படுக்கையை பகிரவும் தயாராக இருப்பதாக நடிகை ஒருவர் கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
14
சித்தார்த் உடன் நடிக்க சான்ஸ் கிடைச்சா... அவருடன் படுக்கையை பகிரவும் தயார் - நடிகையின் பளீச் பேச்சால் பரபரப்பு

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். இதையடுத்து தெலுங்கில் பிசியான அவர், அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தெலுங்கில் பிசியாக நடித்து வந்தாலும், தமிழிலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

24

அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து, கார்த்திக் சுப்புராஜின் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் ஜிகர்தண்டா, சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சித்தார்த், தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

34

இந்நிலையில், நடிகர் சித்தார்த் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற அவருடன் படுக்கையை பகிரவும் தயாராக இருப்பதாக நடிகை ஒருவர் கூறி உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான காயத்ரி ரமா தான் இப்படி ஒரு ஷாக்கிங் தகவலை வெளியிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்... 1000 கோடி பட்ஜெட் படம்..சூர்யா, யாஷுக்கு நோ சொல்லிவிட்டு ‘வேள்பாரி’யாக நடிக்க இந்தி நடிகரை களமிறக்கும் ஷங்கர்?

சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மெண்ட் குறித்து பல்வேறு நடிகைகள் மீடூ புகார் அளித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், சினிமா ஹீரோயின்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை காயத்ரி ரமா அட்ஜஸ்மெண்ட்டுக்கு ஆதரவாக பேசி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

44

அட்ஜஸ்மெண்ட் செய்வது தவறில்லை என்றும் அது அவரவரின் விருப்பம் என்றும் பேசியுள்ள அவர், தனக்கு நடிகர் சித்தார்த் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற யாரேனும் படுக்கையை பகிர சொன்னாலும், அதை செய்ய தயாராக இருப்பதாக கூறி உள்ளார் காயத்ரி ரமா. அவரின் இந்த பேச்சு தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சமூக வலைதளங்களில் இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஜய் சாரிடம் கதை சொன்னது உண்மை தான்... ஆனா? - தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘லவ் டுடே’ இயக்குனர்

click me!

Recommended Stories