1000 கோடி பட்ஜெட் படம்..சூர்யா, யாஷுக்கு நோ சொல்லிவிட்டு ‘வேள்பாரி’யாக நடிக்க இந்தி நடிகரை களமிறக்கும் ஷங்கர்?

First Published | Nov 8, 2022, 8:31 AM IST

எம்.பி. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை மையமாக வைத்து இயக்குனர் ஷங்கர், ஆயிரம் கோடி பட்ஜெட்டில் வரலாற்று படம் ஒன்றை எடுக்க உள்ளாராம்.

வரலாற்று கதையம்சம் கொண்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் தயாராகும் வரலாற்று படங்களுக்கு தனிமவுசு என்றே சொல்லலாம். இதற்கு சான்று ராஜமவுலி இயக்கிய பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை சொல்லலாம்.

இதன் காரணமாக வரலாற்று படங்கள் இயக்கும் ஆசை பல்வேறு முன்னணி இயக்குனர்களுக்கு வந்துள்ளது. அவர்களின் இயக்குனர் ஷங்கரும் ஒருவர். தற்போது இந்தியன் 2 மற்றும் ஆர்.சி.15 போன்ற படங்களை இயக்கி வரும் ஷங்கர், அடுத்ததாக வரலாற்று படம் ஒன்றை இயக்க உள்ளார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது.

எம்.பி. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை மையமாக வைத்து இயக்குனர் ஷங்கர் அந்த வரலாற்று படத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளும் ஒருபக்கம் முழுவீச்சில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. பின்னர் கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் பெயர் அடிபட்டது.

இதையும் படியுங்கள்... விஜய் சாரிடம் கதை சொன்னது உண்மை தான்... ஆனா? - தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘லவ் டுடே’ இயக்குனர்

Tap to resize

ஆனால் அவர்கள் இருவரும் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது போல் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி வேள்பாரி நாவலை மையமாக வைத்து ஷங்கர் இயக்க உள்ள வரலாற்று படத்தில் பாலிவுட் நாயகன் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக உருவாக உள்ளது. தமிழ் நாவலில் பாலிவுட் ஹீரோ நடித்தால் செட் ஆகுமா என்பது தான் தற்போது அனைவரது கேள்வியாகவும் உள்ளது. முன்னதாக ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்.. ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்! ரகசியத்தை உடைத்த ஆர்கே செல்வமணி

Latest Videos

click me!