விஜய் சாரிடம் கதை சொன்னது உண்மை தான்... ஆனா? - தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ‘லவ் டுடே’ இயக்குனர்

First Published | Nov 8, 2022, 7:39 AM IST

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், விஜய்க்கு கதை சொன்னது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார்.

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இவர், அடுத்ததாக இயக்கிய லவ் டுடே திரைப்படம், கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசானது. இப்படத்தின் மூலம் பிரதீப் நாயகனாகவும் அறிமுகமாகி உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

இதுதவிர ராதிகா, சத்யராஜ், ஆஜித், யோகிபாபு, ரவீனா ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ரிலீசான முதல் நாளில் இருந்தே தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது.

இதையும் படியுங்கள்... Actress Rambha : கார் விபத்திற்கு பிறகு பிள்ளைகளுடன் வீடியோ வெளியிட்ட நடிகை ரம்பா...குவியும் வாழ்த்துக்கள்

Tap to resize

காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப், நடிகர் விஜய்க்கு கதை சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதுகுறித்து அவரிடமே சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது : “விஜய் சாருக்கு கதை சொன்னது உண்மை தான். அதைப்பற்றி தற்போது பேசினால், லவ் டுடே படத்தின் புரமோஷனுக்காக பேசினேன் என நினைத்து விடுவார்கள். இப்படம் சக்சஸ்ஃபுல் ஆக ஓடி முடித்த பின்னர் அது பற்றி விரிவாக பேசுகிறேன்” என பிரதீப் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரதீப்பின் அடுத்த படம் விஜய் உடன் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி கைகூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... கவர்ச்சி குயின்... சன்னி லியோனுக்கு ஐ லவ் யூ சொன்ன ஜிபி முத்து! அவங்க ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Latest Videos

click me!