jailer
அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், இந்த படத்தையும் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
jailer
சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் கடந்த மாதம் தான் படப்பிடிப்பை துவங்கியது. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை ஒட்டி திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டராக உள்ள ஸ்டண்ட் சிவா சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்து கூறியுள்ளது வைரலாகி வருகிறது.