நடிகை சமந்தா தற்போது அரியவகை நோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறார். அவர் நடித்துள்ள யசோதா திரைப்படம் வருகிற நவம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்து இருக்கிறார். ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கி இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி தற்போது தமிழ்நாட்டில் வாடகைத் தாய் முறை தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி அந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதால், இந்த விவகாரம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ள சமயத்தில் சமந்தா நடிப்பில் இப்படி ஒரு படம் வருவது பலருக்கும் ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.