ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி'... எப்போ, எந்த OTT-யில் பார்க்கலாம்?

Published : Apr 24, 2026, 03:55 PM IST

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவா நடிச்ச 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' (LIK) படம் தியேட்டர்ல நல்லா ஓடுன பிறகு, இப்போ ஓடிடி-ல ரிலீஸ் ஆகப் போகுது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Love Insurance Kompany OTT Release

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவா நடிச்ச சயின்ஸ்-ஃபிக்ஷன் ரொமான்டிக் படமான 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' (Love Insurance Kompany - LIK) தியேட்டர்ல நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போ இந்தப் படம் ஓடிடி-ல வெளியாகத் தயாரா இருக்கு. படம் ரிலீஸான முதல் நாள்ல மட்டும் உலகம் முழுக்க ரூ.9.93 கோடி வசூல் செஞ்சது. இதுவரைக்கும், குளோபல் பாக்ஸ் ஆபீஸ்ல ரூ.50 கோடிக்கும் மேல வசூல் பண்ணியிருக்கிறதா ரிப்போர்ட்ஸ் சொல்லுது. விக்னேஷ் சிவன் இயக்குன இந்தப் படம், ஏப்ரல் 10-ஆம் தேதி தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆச்சு. இதுல கிருத்தி ஷெட்டி ஹீரோயினா நடிச்சிருக்காங்க.

24
லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஓடிடி ரிலீஸ்

நயன்தாராவோட ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்காங்க. இப்போ, 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' படத்தோட ஓடிடி ரிலீஸ் பத்தின அப்டேட்தான் வெளியாகிருக்கு. இந்தப் படம் அமேசான் ப்ரைம் வீடியோல வெளியாகப் போகுது. வர்ற மே 15-ஆம் தேதியில இருந்து ஸ்ட்ரீமிங் ஆகும்னு சொல்லப்படுது, ஆனா இது இன்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்படல. பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு.

34
எல்.ஐ.கே ரெஸ்பான்ஸ்

இதுக்கு முன்னாடி 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்'னு பிரதீப்போட படங்கள் வரிசையா ₹100 கோடி வசூல் பண்ணி, ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர் கொடுத்த நிலையில LIK ரிலீஸ் ஆச்சு. இதுல 'லவ் டுடே' படத்தை பிரதீப்பே இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள், குடும்ப ஆடியன்ஸ்னு எல்லாரையும் கவர்ற பிரதீப், இந்த காலத்தோட ஒரு மாஸ் ஹீரோவா பார்க்கப்படுறார். பிரதீப் ரங்கநாதனோட சேர்ந்து கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், சுனில் ரெட்டி, சீமான், யோகி பாபு, கௌரி கிஷன்-னு ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்துல நடிச்சிருக்கு.

44
100 கோடி ரேஸில் இணையுமா?

அனிருத் ரவிச்சந்தர் படத்துக்கு இசை அமைச்சிருக்கார். ரவி வர்மன் மற்றும் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் எடிட்டிங் பண்ணியிருக்கார். லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி திரைப்படம் பிரதீப்பின் மத்த படங்களோட ஒப்பிடும்போது ஒரு சுமாரான வெற்றியையே பெற்றிருக்கு. பிரதீப்பின் கெரியரில் 100 கோடி வசூலிக்காத முதல் படம் என்கிற மோசமான சாதனைய இந்த படம் படைச்சிருக்கு. அடுத்த வாரம் தனுஷின் கர படம் தியேட்டர்கள்ல ரிலீஸ் ஆக இருக்கு. அதனால அந்த படம் வெளிவரும் வர லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி படம் தியேட்டர்களில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுது.

லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் கதையில் முதன்முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிப்பதா இருந்துச்சு. இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு 2019-ம் ஆண்டே வெளியாச்சு. ஆனால் பட்ஜெட் பிரச்சனை காரணமா அந்த படத்தை ஷூட்டிங் தொடங்கும் முன்னதாகவே டிராப் பண்ணிட்டாங்க. இதனால் சில ஆண்டுகள் அந்த கதையை கிடப்பில் போட்டிருந்த விக்னேஷ் சிவன், இறுதியாக பிரதீப் ரங்கநாதன் கிட்ட சொல்லி ஓகே வாங்கிவிட்டார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. பல தடைகளுக்கு பிறகு தான் எல்.ஐ.கே படம் ரிலீஸ் ஆகியிருக்கு.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories