3900 கோடி வசூல்! பாகுபலி, துரந்தர், தங்கல் படங்களை எல்லாம் ஓரங்கட்டிய அந்த இந்திய படம் எது?

Published : Apr 24, 2026, 11:35 AM IST

இப்போதைக்கு இந்தியாவிலேயே அதிக வசூல் செஞ்ச படம் 'தங்கல்'னு நாம நினைக்கிறோம். ஆனா, பணவீக்கத்தை கணக்குல வெச்சுப் பார்த்தா, இந்த மொத்த லிஸ்ட்டே தலைகீழா மாறிடும்.

PREV
14
Indian Box Office records

ஒரு படம் எவ்வளவு வசூல் செஞ்சதுங்கிறத பத்தி இப்போ நாம பேசுற அளவுக்கு முன்னாடி பேசினது இல்ல. இப்போலாம் தயாரிப்பாளர்களே போஸ்டர்ல வசூல் கணக்கை போட்டு விளம்பரம் பண்றாங்க. ஆனா, ஒரு காலத்துல ஒரு படத்தோட வெற்றியை அது எத்தனை நாள் தியேட்டர்ல ஓடுச்சுங்கிறத வெச்சுதான் அளந்தாங்க. இப்போதைய பாக்ஸ் ஆபிஸ் கணக்குப்படி, ஆமிர் கான் நடிச்ச 'தங்கல்' படம்தான் இந்தியாவோட ஆல்-டைம் நம்பர் 1. 2000 கோடி ரூபாய்க்கு மேல வசூல் செஞ்ச ஒரே இந்தியப் படமும் இதுதான். சீனா, ஹாங்காங் போன்ற நாடுகள்ல கிடைச்ச பிரம்மாண்ட வரவேற்பாலதான் 'தங்கல்' இந்த சாதனையை படைச்சது.

24
பணவீக்கம் அடிப்படையில் அதிக வசூல் அள்ளியது எந்த படம்?

கிட்டத்தட்ட 10 வருஷம் ஆகியும், வேற எந்த இந்தியப் படமும் 'தங்கல்' வசூலை முந்தல. ஆனா, ஒரு படத்தோட வெற்றியை வெறும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வெச்சு மட்டும் கணக்கிடுறதுல ஒரு சிக்கல் இருக்கு. அதுதான் பணவீக்கம் (inflation). உதாரணத்துக்கு, இன்னைக்கு ஒரு கோடி டிக்கெட் விக்கிற ஒரு படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூல் செய்யும். ஆனா, இதே ஒரு கோடி டிக்கெட் 50 வருஷத்துக்கு முன்னாடி வித்திருந்தா, அந்தப் படம் 3-4 கோடி ரூபாய்தான் வசூல் செஞ்சிருக்கும். இதுதான் பணவீக்கத்தோட வித்தியாசம்.

34
முதலிடத்தில் இந்த படமா?

இந்த பணவீக்கத்தை கணக்குல எடுத்துக்கிட்டு, பழைய படங்களோட வசூலை 2026-ம் ஆண்டு மதிப்புக்கு மாத்தினா, 'தங்கல்', 'பாகுபலி', 'துரந்தர்' போன்ற படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளுற பல படங்கள் நம்ம லிஸ்ட்ல இருக்கு. அப்படிப் பார்த்தா, இந்தியாவோட உண்மையான ஆல்-டைம் பிளாக்பஸ்டர் ஒரு பழைய பாலிவுட் படம்தான். 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியிட்ட ஒரு ரிப்போர்ட்டின்படி, பணவீக்கத்தை கணக்கில் கொண்டால், இந்திய சினிமாவின் எக்காலத்திற்குமான மிகப்பெரிய வெற்றி 'முகல்-இ-அசாம்' படம்தான். 1960-ல் வெளியான இந்தப் படம், அப்போதே 15 கோடி ரூபாய் வசூல் செஞ்சது.

44
3900 கோடி வசூல்

அதே படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருந்தா, அதோட வசூல் சுமார் 3900 கோடி ரூபாயாக இருந்திருக்கும்! இந்த லிஸ்ட்ல, 1975-ல் வெளியான 'ஷோலே' படம் 'தங்கல்' படத்தை விட முன்னிலையில் இருக்கு. அப்போ 30 கோடி ரூபாய் வசூலித்த 'ஷோலே', இன்னைக்கு அதே வெற்றியைப் பெற்றால் 3000 கோடி ரூபாய் வசூலிக்கும். 2016-ல் வெளியான 'தங்கல்' படத்தின் இன்றைய பணவீக்க மதிப்பு 2830 கோடி ரூபாய். இந்த லிஸ்ட்ல 'பாகுபலி 2' நான்காவது இடத்திலும், 'புஷ்பா 2' ஒன்பதாவது இடத்திலும் இருக்கு.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories