15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?

Published : Apr 24, 2026, 01:43 PM IST

நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் திரையில் சக்சஸ்ஃபுல் ஜோடியாக இருந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் சுமார் 15 ஆண்டுகள் இணைந்து நடிக்காமல் இருந்தனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
15 years gap between Vijay and Trisha

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒன்று விஜய் மற்றும் திரிஷா கிருஷ்ணன். இவர்களின் ஜோடி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஒரு கட்டத்தில் நீண்ட காலம் சேர்ந்து நடிக்கவில்லை என்பது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. விஜய்–திரிஷா ஜோடி முதன்முதலில் 2004-ல் வெளியான கில்லி படத்தில் இணைந்தது. அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதன்பின் “திருப்பாச்சி”, “ஆதி”, “குருவி” போன்ற பல படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் 2008-ல் வெளியான “குருவி”க்கு பிறகு, இந்த ஜோடி சுமார் 15 ஆண்டுகள் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை.

24
15 ஆண்டுகள் இணையாத ஜோடி

அந்த காலகட்டத்தில் விஜய் மற்றும் திரிஷா இடையே காதல் வதந்திகள் பரவியதாக கூறப்பட்டது. அப்போது விஜய் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால், இந்த வதந்திகள் பெரிதாக பேசப்பட்டன. இதன் பின்னணியில், விஜயின் குடும்பத்தினர், குறிப்பாக பெற்றோர், இவருடன் திரிஷா மீண்டும் இணைந்து நடிக்க வேண்டாம் என்று கேட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனை மதித்த விஜய், பல ஆண்டுகள் திரிஷாவுடன் சேர்ந்து நடிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவருமே அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தாங்கள் நல்ல நண்பர்கள் என்பதை தொடர்ந்து கூறி வந்தனர்.

34
மீண்டும் இணைந்தது எப்போது?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஜோடி மீண்டும் லியோ திரைப்படத்தின் மூலம் ஒன்றாக திரையில் தோன்றியது. இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதில் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார் திரிஷா. அப்படம் 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்திருந்தது. அப்படம் ரூ.610 கோடி வசூலித்திருந்தது. இப்படத்தில் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையே லிப்லாக் முத்தக் காட்சி இடம்பெற்று இருந்ததும் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

44
விவாகரத்து சர்ச்சை

தற்போது நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளனர். விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு கடந்த ஏப்ரல் 20ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜூன் மாதம் 15ந் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த விவாகரத்து மனு தாக்கல் செய்தபோது அதில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து இருந்தார் சங்கீதா. தன்னுடைய கணவருக்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குறிப்பிட்ட அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதனால் இந்த வழக்கு மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. அந்த நடிகை யார் என்பதை சங்கீதா குறிப்பிடவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories