இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
லாஸ்லியா சினிமா, மாடலிங் என பிசியாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு ரசிகர்கள் துடிதுடித்தனர். கனடாவில் வேலை பார்த்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரண செய்தி தான் அது.
அப்பாவின் இறப்பால் மனம் நொந்து போன லாஸ்லியா சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிரண்ட் பைனலில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஆஜித் உடன் லாஸ்லியா எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோ சோசியல் மீடியாவில் வைரலானது.
தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லாஸ்லியா படு மாடர்ன் உடையிலும், கருப்பு சேலையில் கண்ணை பறிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
முன்பை விட கவர்ச்சியும் அழகும் கூடி உள்ளத்தை இந்த புகைப்படங்களில் பார்க்கமுடிகிறது.
கருப்பு சேலையில் செம்ம கியூட்டாக போஸ் கொடுக்கும் லாஸ்லியா
ரசிகர்கள் மனதை கவர்ந்திழுக்கும் பேரழகி
இயற்க்கை எழிலோடு கூடிய அசத்தல் போட்டோஸ்
விதவிதமாக போஸ் கொடுத்து வசீகரிக்கும் லாஸ்லியா