பாலிவுட் பட நாயகிகள் ஒவ்வொருவராக தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தீபிகா படுகோனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தானே படுத்திகொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.
அவரை தொடர்ந்து, நேற்றைய தினம் நடிகை ஷில்பா ஷெட்டி, தன்னை தவிர தன்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய ஒரு வயது குழந்தையையும் கொரோனா விட்டு வைக்கவில்லை என, சோகமாக பதிவிட்டிருந்தார்.
இவர்களை தொடர்ந்து, தற்போது 'தலைவி' பட நாயகி கங்கனா ரனாவத், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்....
கடந்த சில நாட்களாக என் கண்களில் லேசான எரிச்சல், உணர்ச்சியுடன், சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன்.
ஹிமாச்சலுக்குச் செல்லலாம் என்று நினைத்தால், இன்று என்னுடைய கொரோனா பரிசோதனை முடிவில், தனக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக வந்துள்ளது. இந்த வைரஸ் என் உடலில் ஒரு பார்ட்டி வைத்துக்கொண்டிருப்பது எனக்குத் தெரியவில்லை, இப்போது தன எனக்கு தெரியும்.
மக்கள் தயவுசெய்து பயம் கொள்ள வேண்டாம், நீங்கள் பயந்தால் அது உங்களை மேலும் பயமுறுத்தும், வாருங்கள் இந்த கோவிட் -19 ஐ அழிப்போம், இது ஒரு சிறிய நேர காய்ச்சலைத் தவிர வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அடுத்தடுத்த பிரபலங்கள் கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டு வருவது, திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.