உச்சத்தில் உயர்த்திய கமலின் நண்பர்..! நன்றியை மறக்காத ரஜினி..! கூலியில் கைமாறு செய்த லோகேஷ் கனகராஜ்..!

Published : Aug 20, 2025, 05:41 PM IST

மாப்பிள்ளை, தர்மதுரை என்று ரஜினிக்கு அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை இயக்கி, கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே திடீரென மாரடைப்பில் காலமானார். அதுவும் அவர் இயக்கிய தர்மதுரை படத்தின் நூறாவது நாள் விழா மாலையில் நடக்க இருக்கையில், காலையில் மறைந்தார். 

PREV
14
கமல் மூலம் ரஜினிக்கு அறிமுகமாகி...

இயக்குநர் பேரரசுவுக்கு முன்பே நாட்டரசன்கோட்டையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டியவர் இயக்குநர் ராஜசேகர்.

‘நாம் பிறந்த மண்’ என்கிற படத்துக்கு முதன்முதலாக கதை எழுதினார். பின்னாளில் இதே கதைதான் கமல்ஹாசனின் ‘இந்தியன்’ ஆனது. ‘நாம் பிறந்த மண்’ணில் அப்பா சிவாஜியால், நாட்டுக்கு துரோகம் செய்ததால், கொல்லப்படும் மகனாகவும் அதே கமல்தான் நடித்திருந்தார். கமல் மூலமாக ரஜினிக்கும் அறிமுகமாகி மூவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். சுப்பிரமணி என்கிற பேரு நல்லால்லே என்று அவருக்கு ராஜசேகர் என்று ஸ்க்ரீன்நேம் மாற்றியதே ரஜினிதான்.

24
இயக்குநர் ராஜசேகரின் திறமையை வியந்த ரஜினி

கதாசிரியராக தமிழ் சினிமாவுக்கு வந்திருந்தாலும் ராஜசேகருக்கு இயக்கத்தின் மீது ஆர்வம் பிறந்தது. இயக்குநர் இராம நாராயணனிடம் உதவியாளராக பணியாற்றி அனுபவம் பெற்றார். அதன் பின்னர் இராம நாராயணனே தன்னுடைய தயாரிப்பில் கன்னடப்படம் ஒன்றின் மூலமாக ராஜசேகரை இயக்குநர் ஆக்கினார். பாம்பு, குரங்கெல்லாம் வைத்து எடுத்த அந்தப் படத்தை தெலுங்கிலும் ‘புன்னமி நாகு’ என்று மீண்டும் இயக்கினார். சிரஞ்சீவி இந்தப் படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்து, தெலுங்கில் மாஸ் ஹீரோவாக எஸ்டாப்ளிஷ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ராஜசேகர் இயக்கிய ஒரு சில படங்கள் சரியாக போகாத நிலையில், வில்லனாக நடித்துக் கொண்டிருந்த தியாகராஜனை ஹீரோவாக்கி அவர் எடுத்த ‘மலையூர் மம்பட்டியான்’ சூப்பர்ஹிட் ஆனது. அதன் பிறகு தமிழின் நெம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநர் ஆனார். ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தை பார்த்த ரஜினி, தன் நண்பனின் திறமையை வியந்து, பாலிவுட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார். இந்தியில் ‘கங்குவா’ என்று ரஜினியை மலையூர் மம்பட்டியானாக ஆக்கினார். ‘கங்குவா’ எடுத்துக் கொண்டிருந்தபோதே, தமிழில் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தையும் ரஜினிக்காக இயக்கிக் கொண்டிருந்தார்.

34
ரஜினிக்கு ‘மாப்பிள்ளை’ கொடுத்த ராஜசேகர்

ரஜினிக்கு மீண்டும் ’படிக்காதவன்’ இயக்கியவர், கமலுக்கு ‘காக்கிச்சட்டை’, ‘விக்ரம்’ என்று இயக்கித் தள்ளினார். ரஜினி, கமலின் திரையுலக வாழ்வின் தொடக்கக்கால நண்பராக இருந்ததால், அவர்களுடன் ராஜசேகருக்கு கெமிஸ்ட்ரி பக்காவாக செட்டாகி இருந்தது. விஜயகாந்துக்கும் ‘ஈட்டி’, ‘கூலிக்காரன்’ என்று வெற்றிப்படங்களை இயக்கினார். ஏவிஎம்மின் மகத்தான வெற்றிப்படங்களின் ஒன்றான ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’வை இயக்கியவரும் ராஜசேகர்தான்.

‘மாப்பிள்ளை’, ‘தர்மதுரை’ என்று ரஜினிக்கு அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை இயக்கி, கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே திடீரென மாரடைப்பில் காலமானார். அதுவும் அவர் இயக்கிய ‘தர்மதுரை’ படத்தின் நூறாவது நாள் விழா மாலையில் நடக்க இருக்கிறது எனும்போது, காலையில் மறைந்தார்.

44
கூலியில் செய்த கைமாறு

ரஜினியால் ஏற்றுக் கொள்ளவே முடியாத பேரிழப்பு. ‘கூலி’ படத்தில் ரஜினியின் மறைந்த நண்பனாக நடித்த சத்யராஜ் கேரக்டரின் பெயர் ராஜசேகர். சத்யராஜுக்கு பெரிய பிரேக் கொடுத்த ‘காக்கிச்சட்டை’யின் இயக்குநர் அவர்தான். ‘கூலி’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தமிழில் மிகவும் பிடித்த படமான கமலின் ‘விக்ரம்’ (1986) படத்தின் இயக்குநரும் ராஜசேகர்தான்.

Read more Photos on
click me!

Recommended Stories