கூலி படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான 'கூலி' திகழ்ந்தது. லோகேஷ் - ரஜினி முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் நாள் முதலே இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் போகப் போக பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த இப்படம் வசூலில் தூள் கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கோவையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் 'கூலி' படம் பார்த்துள்ளார்.
24
கூலி படம் பார்த்த லோகேஷ்
ரசிகர்களுடன் படம் பார்க்கும் லோகேஷின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் கருத்துகளைக் கேட்டு, படத்தில் உள்ள குறைகளைப் புரிந்துகொள்ள இது லோகேஷுக்கு உதவும் என சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. கோவையில் உள்ள பிராடுவே சினிமாஸில் அவர் கூலி படம் பார்த்ததாக கூறப்படுகிறது. லோகேஷின் முந்தைய படங்களை விட 'கூலி'க்கு அதிக நெகடிவ் விமர்சனங்கள் எழுந்தன. ரஜினிகாந்துடன், பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கான், நாகார்ஜுனா, மலையாளத்தில் இருந்து சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. அனிருத் இசையமைத்த இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
34
நெகடிவ் விமர்சனங்களை சந்தித்த கூலி
தனித்த படமாக இருப்பதால் எல்.சி.யு. படங்களைப் போல சிறப்பாக இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 500 கோடி வசூலைக் கடந்ததன் மூலம் 'லியோ' படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக 500 கோடி வசூலைப் பெற்ற இயக்குனர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் லோகேஷ் கனகராஜ். கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். இப்படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றிருந்ததால் இதன் வசூல் எதிர்பார்த்ததை விட கம்மியாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளாராம். அதற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாம். அப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படம் முடித்த பின்னரே கைதி 2 படத்தை எடுக்க உள்ளாராம் லோகி.