லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சதீஷ் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து சிஎஸ்கே மேட்சை கண்டு ரசித்தனர்.
பிகில், லவ் டுடே போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, சிஎஸ்கே மேட்சின் போது நடிகை திரிஷா மற்றும் தோழிகளுடன் எடுத்துக் கொண்ட செல்பி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகையான நடிகை பிந்து மாதவி, தல 7 என்கிற வாசகம் அடங்கிய டீசட் அணிந்தபடி சிஎஸ்கே போட்டியை கண்டுகளித்தார்.
லியோ படத்தின் நாயகி திரிஷா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளிப்பதற்காக மஞ்சள் நிற உடையில் வந்து தனது தோழிகளுடன் ஐபிஎல் போட்டியை கண்டுகளித்தார்.
ஐபிஎல் போட்டியை காண வந்த இயக்குனர் சஞ்சய் பாரதி உடன் நடிகர் ஹரிஷ் கல்யாண் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இது. இவர்கள் இருவரும் ‘தனுசு ராசி நேயர்களே’ என்கிற படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் எல்.ஜி.எம் படத்தின் குழுவினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு ரசித்தனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அப்படத்தை புரமோட் செய்யும் விதமாக அப்படக்குழுவினர் சொப்பன சுந்தரி என எழுதப்பட்ட டீசர்ட் அணிந்து வந்து ஐபிஎல் போட்டியை கண்டுகளித்தனர்.
ஐபிஎல் போட்டியை காண வந்திருந்த நடிகை திரிஷா உடன் நகைச்சுவை நடிகர் சதீஷ் சேப்பாக்கம் மைதானத்தில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இது.