தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தில் அறிமுகமான நடிகை நயன்தாரா, முதல் படத்திலேயே தன்னுடைய கொழுக்கு... மொழுக்கு... அழகால் தமிழ் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றார்.
அடுத்தடுத்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மட்டுமின்றி, பர்சனல் வாழ்க்கையிலும் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்த நயன்தாரா.. விடாப்பிடியாக சினிமாவில் நின்று சாதித்தவர். இவரின் தைரியமும், இவர் கடந்து வந்த கரடு முரடான பாதைகளும் தான், இன்று நயன்தாராவை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற கோபுரத்தின் உச்சியில் அமர வைத்துள்ளது.
நயன்தாராவுக்கு அம்மாவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், பேட்டி ஒன்றில்... நயன்தாரா பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்களை கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார். நயன்தாராவை பொறுத்தவரை அவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், எப்போதுமே மிகவும் சாதாரணமாக பழகக்கூடிய சிறந்த நபரால்.
இதில் ஏற்கனவே சில தகவல்களை டிடி உள்ளிட்ட பிரபலங்கள் நயன்தாரா குறித்து பகிர்ந்து கொண்டிருந்தாலும், சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ள சில தகவல்கள் யாருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. இவர் நயன் குறித்து பகிர்ந்துள்ளதை கேட்டு, தலைவி எப்போதுமே வேறு ரகம் என கொண்டாடி வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.
அந்த வகையில், நயன்தாரா தன்னுடைய 75 ஆவது படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளது. அதை போல் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர், எஸ் சுஷாந்த் இயக்கத்தில் டெஸ்ட் என்கிற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாக்கியது. இந்த படத்தில் முதல் முறையாக மாதவன் மற்றும் சித்தாத்துடன் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.