பொதுவாக தமிழ் புத்தாண்டு, நியூ இயர், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களை குறி வைத்து சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த முறை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜய், அஜித், தனுஷ், விக்ரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாததால், சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள், ராகவா லாரன்ஸ், அருள் நிதி, விஜய் ஆண்டனி போன்ற இரண்டாம் கட்ட நாயகர்களின் படங்கள் மற்றும் சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நாயகிகளின் படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்த முழு விவரம் இதோ...
ஏப்ரல் 14 ஆம் தேதி... நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி தயாரித்துள்ள 'ருத்ரன்' திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் டப்பிங் உரிமம் குறித்து எழுந்த பிரச்சனைக்காக, ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தற்காலிகமாக ருத்ரன் படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ராகவா லாரன்சுக்கு வந்த புது பிரச்சனை..! 'ருத்ரன்' படத்திற்கு அதிரடி தடை..!
இதைத்தொடர்ந்து நடிகர் அருள்நிதி, மற்றும் பாரதி ராஜா நடிப்பில் உருவாகியுள்ள 'திருவின் குரல்' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இப்படத்தை ஹரிஷ் பிரபு என்பவர் இயக்க, லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வெற்றிலையில் ,படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழ் புத்தாண்டை குறி வைத்துள்ள, ஹாரர் கலந்த காமெடி திரைப்படம் ரிபப்ரி. இயக்குனர் நா அருண் கார்த்திக் இயக்கத்தில், குட்டி பவானி மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள திரைப்படம் ரிபப்பரி. இந்த படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான காவியா அறிவுமணி கதாநாயகியாக நடித்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை நா.அருண் காந்திக்கே தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் பாபு ஈஸ்வரன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி, சோனு சூட், யோகி பாபு, ராதாரவி, ரோபோ சங்கர், முனிஷ்காந்த், கஸ்தூரி, உள்ளிட்ட பல நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷுக்கு முன்பே இரண்டு காதல்! தற்கொலை செய்து கொண்ட காதலன்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ரகசியத்தை உடைத்த பயில்வான்
இந்த புத்தாண்டுக்கு வெளியாக உள்ள மிகப்பெரிய பட்ஜட்டில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்றால் அது, நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலம்' திரைப்படம் தான். ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம், பான் இந்திய படமாக உருவாகியுள்ளதால், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. புராண கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை, இயக்குனர் குணசேகரன் இயக்க, வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக பிரபலம் மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். மணி ஷர்மா இசையமைத்துள்ளார்.
அதேபோல் கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மற்றொரு திரைப்படமான 'சொப்பன சுந்தரி' படமும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் பூதானத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஒரு காரை பரிசாக பெரும் குடும்பத்திற்கு இடையே.. என்னென்ன பிரச்சனைகள் வருகிரது என்பது குறித்தே மிகவும் காமெடியாகவும், விறுவிறுப்பாகவும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கியுள்ள, இந்த படத்தில் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
என் கணவரை பார்த்து தாத்தாவானு கேட்குறாங்க... மனம் நொந்து கண்ணீர் விட்ட நீலிமா ராணி..!
விஜய் ஆன்டனி இயக்கி, தயாரித்து, நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படமும் இந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. இதனால் ஒரே நாளில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, காவியா தப்பார் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் விஜய், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், யோகி பாபு உள்ளிட்டா பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆண்டனியை இசையமைத்துள்ளார். முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் வெளியாக உள்ள இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவும் வெளியாகத்ததால் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் மட்டும் அடுத்தடுத்து எட்டு படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. அதிக திரையரங்குகளில் வெளியாக இருந்த, ருத்ரன் திரைப்படம் ரிலீஸாவது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், சிறு பட்ஜெட் படங்களும் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.