தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் 100 கோடி கிளைப்பில் இணைத நிலையில், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் 'கர்ணன்' படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவே மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதியினர், சிறுவயதில் தொலைந்து போன தங்களுடைய மகன்தான் தனுஷ் என்று, நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தனுஷ் நேரிலும் ஆஜராகி உள்ளார். இவரின் அங்க அடையாளங்கள் குறித்த சோதனையின் போது. லேசர் மூலம், சில அடையாளங்கள் அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும் தனுஷ் தரப்பில் இருந்து இது முற்றிலும் வதந்தி என கூறப்பட்ட நிலையில், ஒரு நிலையில் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர்ந்து பொய்யான வழக்குகளை இந்த தம்பதி பணம் பறிக்கும் நோக்கத்தில் தொடர்ந்தார், அவர்கள் மீது 10 கோடி ரூபாய்க்கு நஷ்டஈடு வழக்கு தொடர்வேன் என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தனுஷுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமான, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷை தன்னுடைய மகன் என கூறி வரும், கதிரேசனுக்கு 70 வயதாகும் நிலையில், திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
என் கணவரை பார்த்து தாத்தாவானு கேட்குறாங்க... மனம் நொந்து கண்ணீர் விட்ட நீலிமா ராணி..!
அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், கதிரேசனின் டி என் ஏ-வை தனுஷின் வழக்கு தொடர்பாக அவருடைய டிஎன்ஏவை பாதுகாக்க வேண்டும் என மதுரை தம்பதியினர் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் டைட்டஸ் என்பவர் மருத்துவமனை டீனுக்கு மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் மீண்டும் தனுஷுக்கு குடைச்சல் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.