ராம் சரண் மற்றும் செல்லப்பிராணி ரைம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் வந்த ஆர் ஆர் ஆர் படத்திற்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவியது. இந்தப் பாடலுக்கு ரீல்ஸூம் பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடினர்.
ராம் சரண் மற்றும் செல்லப்பிராணி ரைம்
இந்த நிலையில், தான் நேற்று தேசிய செல்லப்பிராணிகள் தினம் கொண்டாட்டப்பட்டது. செல்லப்பிராணிகளை விரும்பக் கூடிய ராம் சரன் ரைம் என்ற செல்லப்பிராணி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு என்று தனியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட அவர் உருவாக்கியிருக்கிறார். அதில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ராம் சரண் மற்றும் செல்லப்பிராணி ரைம்
இதில், ராம் சரண் மட்டுமின்றி அவரது மனைவி உபாஸனா காமினேனியும் செல்லப்பிராணியை கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இவ்வளவு ஏன் கடந்த மார்ச் மாதம் ரைம் தனது முதல் சர்வதேச விமான பயணம் மேற்கொண்டது.
ராம் சரண் மற்றும் செல்லப்பிராணி ரைம்
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ரைமின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராம் சரண் பதிவிட்டிருந்தார். ஷூட்டிங் தவிர மற்ற நாட்களில் எல்லாம் ராம் சரண் மற்றும் உபாசனா இருவரும் தங்களது ரைமுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருவதை வாடிகையாக கொண்டுள்ளனர்.
ராம் சரண் மற்றும் செல்லப்பிராணி ரைம்
துபாயில் வைத்து தனது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர், நண்பர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். ராம் சரண் மற்றும் உபாஸனா தம்பதியினர் தற்போது மாலத்தீவில் முகாமிட்டுள்ளனர். அவர்களது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.