தனுஷுக்கு முன்பே இரண்டு காதல்! தற்கொலை செய்து கொண்ட காதலன்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ரகசியத்தை உடைத்த பயில்வான்

Published : Apr 12, 2023, 12:53 PM IST

தனுஷுக்கு முன்பே இரண்டு பேரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா காதலித்ததாக கூறி பழைய கதைகளை கிளறியுள்ள பயில்வான், யாருக்கும் தெரியாத அந்த மற்றொரு காதலன் யார் என்றும் கூறியுள்ளார்.  

PREV
17
தனுஷுக்கு முன்பே இரண்டு காதல்! தற்கொலை செய்து கொண்ட காதலன்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ரகசியத்தை உடைத்த பயில்வான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்ததில் இருந்தே, அவ்வபோது ஐஸ்வர்யாவின் பழைய காதல் மற்றும் காதலர்கள் பற்றிய தகவல்கள் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

27

இந்நிலையில் எப்போதுமே சர்ச்சையான விஷயங்களை பேசி ரசிகர்களிடம் சிக்கிக் கொள்ளும் பயில்வான் ரங்கநாதன்,  இதுவரை யாருக்கும் தெரியாத ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது காதலர் குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
 

என் கணவரை பார்த்து தாத்தாவானு கேட்குறாங்க... மனம் நொந்து கண்ணீர் விட்ட நீலிமா ராணி..!

37

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, நடிகர் சிம்புவை காதலித்ததாக கூறப்பட்டது. மேலும் இது குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகி உள்ளன. ஆனால் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் என கூறப்பட்டது. ஐஸ்வர்யாவை மறக்க முடியாமல், சிம்பு மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஐஸ்வர்யா விவகாரத்தால் தான் தனுஷ் - சிம்பு ஆகியோரின் நட்பில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஒரு முறை கூட சிம்பு மற்றும் தனுஷ் இதுகுறித்து வெளிப்படையாக பேசியதே இல்லை.

47

தற்போது சிம்புவை அடுத்து ஐஸ்வர்யா மற்றொருவரை காதலித்ததாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புதிய குண்டை தூக்கிபோட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது காதலர் குறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், அந்த நபர் ஒரு தொழிலதிபரின் மகன் என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்டு ரசிகர்கள் சிலர் ஏன் பழைய குப்பைகளை கிளற வேண்டுமா என வழக்கம்போல் பயில்வானை விளாசி வருகிறார்கள்.

'அயோத்தி' படத்தை பார்த்து... சசிகுமாரை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!

57

இதன் பின்னர் தான் ஐஸ்வர்யா - தனுஷ் குறித்து காதல் கிசுகிசு எழ, நேரடியாக கஸ்தூரி ராஜாவுக்கே போன் போட்டு, தன்னுடைய மகளை, உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதமா என ரஜினி கேட்க, கஸ்தூரி ராஜாவும் ஓகே சொன்னதால் இந்த திருமணம் நடந்தகாக, ரஜினிகாந்த் அப்போது சொன்ன விஷயத்தை நினைவு கூர்ந்து, பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
 

67

தனுஷ் -  ஐஸ்வர்யா தம்பதி அனைவரும் பொறாமை கொள்ளும் வகையில் வாழ்ந்து வந்ததும்,  இவர்களின் காதலுக்கு அடையாளமாக லிங்கா மற்றும் யாத்ரா ஆகிய இரு மகன்களும் உள்ளது அனைவருமே அறிந்தது தான். அதே போல் தனுஷின் அசுர வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்து உதவினார் ஐஸ்வர்யா என்றால் , அதனை யாராலும் மறுக்க முடியாது. இந்த அழகு ஜோடி மீது யார் கண் பட்டதோ... கடந்த ஆண்டு திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்தனர்.

மேடையில் சட்டையை கழட்டி... சிக்ஸ் பேக்கை காட்டி பூஜா ஹெக்டேவை மிரள வைத்த சல்மான் கான்! வைரலாகும் வீடியோ!
 

77

ஆனால் தற்போது வரை இவர்களுடைய விவாகரத்து குறித்து மனு தாக்கல் செய்யப்படாத நிலையில், தனுஷுக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர் சுப்பிரமணியன் சிவா,  ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் கருத்து வேறுபாடை மறந்து பேசி வருவதாகவும்.. எனவே அடுத்த ஆண்டு தங்களுடைய பிள்ளைகளுக்காக இணைந்து வாழ்வார்கள் என கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சில பாசிட்டிவான தகவல்களை கூறினாலும், தேவையில்லாமல் ஐஸ்வர்யாவின் பழைய காதல் கதைகளை கிளறி உள்ளது தான் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories