கைதி 2 படத்துக்காக கூலியை ஏத்திக் கேட்கும் லோகேஷ் கனகராஜ்... அதுக்குன்னு இவ்வளவா?

Published : Aug 20, 2025, 12:45 PM IST

கூலி படத்திற்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். கைதி 2 படத்திற்காக அவர் வாங்க உள்ள சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Lokesh Kanagaraj Increase Salary for Kaithi 2

மாநகரம் படம் மூலம் அறிமுகமாகி, கைதி என்கிற மாஸ்டர் பீஸ் படத்தின் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து விஜய்யை வைத்து இவர் இயக்கிய மாஸ்டர், லியோ ஆகிய திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடின. அதேபோல் தன்னுடைய குருவான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்கிற தரமான ஹிட் படத்தை கொடுத்தார் லோகி. இப்படி தொடர்ந்து ஐந்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு ஆறாவதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைய வாய்ப்பு கிடைத்தது. அவரை வைத்து கூலி என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

24
ரஜினி - லோகேஷ் கூட்டணி

ரஜினிகாந்தும், லோகேஷ் கனகராஜும் முதன்முறையாக கூட்டணி அமைத்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வந்தது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினி உடன் சோபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, மோனிஷா, சத்யராஜ், காளி வெங்கட் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது கூலி. இப்படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.50 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருந்தது.

34
சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்

கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 திரைப்படம் உருவாக உள்ளது. இது எல்சியூ படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். கூலி படத்திற்காக ரூ.50 கோடி சம்பளம் வாங்கிய லோகேஷ், கைதி 2 படத்திற்காக ரூ.75 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதன்மூலம், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளாராம் லோகி.

44
கைதி 2 பட்ஜெட்

கைதி 2 திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.190 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதில் லோகேஷ் கனகராஜுக்கு 75 கோடி சம்பளம், நடிகர் கார்த்திக்கு 25 கோடி சம்பளம் வழங்கப்பட இருக்கிறதாம். இதர நடிகர்களின் சம்பளம் போக, ரூ.50 கோடி பட்ஜெட் அப்படத்தின் மேக்கிங்கிற்காக ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் கைதி 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. கூலி படத்திற்காக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட லோகேஷ், கைதி 2 மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories