சம்பள விஷயத்தில் ஷங்கரை நெருங்கும் லோகேஷ் கனகராஜ்... லியோ படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?

Published : Feb 09, 2023, 09:28 AM IST

தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் லியோ படத்திற்காக வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

PREV
15
சம்பள விஷயத்தில் ஷங்கரை நெருங்கும் லோகேஷ் கனகராஜ்... லியோ படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?

மாநகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ், அப்படத்தின் மூலம் அதிரி புதிரியான வெற்றியை ருசித்ததோடு மட்டுமின்றி, அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பையும் தட்டிதூக்கினார்.

25

மாஸ்டர் படத்தில் விஜய்யையும், விஜய் சேதுபதியையும் நடிக்க வைத்து தரமான மல்டி ஸ்டாரர் படமாக கொடுத்து பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார். இதன்பின் திரையுலகில் தான் குருவாக மதிக்கும் கமல்ஹாசனுடன் பணியாற்றும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பை தரமாக பயன்படுத்திக்கொண்ட அவர், விக்ரம் எனும் அதிரடியான ஆக்‌ஷன் படத்தை கொடுத்து, தான் ஒரு ரியல் ஃபேன் பாய் என்பதை நிரூபித்தார்.

35

இப்படம் லோகேஷ் இயக்கத்தில் இதுவரை வெளியான 4 படங்களுமே மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில், தற்போது விஜய்யை வைத்து லியோ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். 2023-ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... அந்த நாட்கள் எரிமலை போல இருந்தது... சிம்பு உடனான காதல் பிரேக்-அப் ஆனது குறித்து மனம் திறந்த ஹன்சிகா

45

இப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், சம்பள விஷயத்திலும் அசுர வளர்ச்சி கண்டுள்ளார். அவர் முதன்முதலில் இயக்கிய மாநகரம் படத்துக்காக அவருக்கு ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது. பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்க ரூ.1 கோடி சம்பளத்துடன் கமிட் ஆன லோகேஷுக்கு, அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து ரூ.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இதேபோல் தான் விக்ரம் படத்திற்கும் ரூ.10 கோடி சம்பளத்துடன் கமிட் ஆன அவருக்கு அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து ரூ.12 கோடி சம்பளமாக வழங்கியதோடு 80 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

55

இந்நிலையில், லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக அவர் ரூ.20 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் பிரம்மாண்ட வெற்றிபெறும் என கணிக்கப்படுவதால், வெற்றிக்கு பின் அவருக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதன்மூலம் சம்பள விஷயத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை நெருங்கிவிட்டார் லோகேஷ். ஷங்கர் தற்போது இயக்கி வரும் இந்தியன் 2 படத்துக்காக ரூ.35 முதல் 40 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஒரே பதிவு... ஒட்டுமொத்த வதந்தியும் குளோஸ்! மீண்டும் லியோ படப்பிடிப்பில் திரிஷா - வைரலாகும் போட்டோ

Read more Photos on
click me!

Recommended Stories