முதல் படத்திலேயே இத்தனை லிப்லாக் காட்சியா...! ஹீரோயின் ஆனதும் கவர்ச்சியில் மிரட்டும் குட்டி நயன் அனிகா

Published : Feb 09, 2023, 07:45 AM ISTUpdated : Feb 10, 2023, 08:49 AM IST

ரசிகர்களால் குட்டி நயன் என்று அழைக்கப்படும் அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள ஓ மை டார்லிங் படத்தின் டிரைலர் ரிலீசாகி வைரலாகி வருகிறது.

PREV
17
முதல் படத்திலேயே இத்தனை லிப்லாக் காட்சியா...! ஹீரோயின் ஆனதும் கவர்ச்சியில் மிரட்டும் குட்டி நயன் அனிகா

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் அனிகா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து இருந்தார். இப்படத்தில் அஜித்துக்கும், இவருக்கும் இடையேயான தந்தை - மகள் உறவு அழகாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

27

என்னை அறிந்தால் படத்தில் அஜித் - அனிகா இடையேயான தந்தை - மகள் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்ததால், மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அனிகாவுக்கு வாய்ப்பு அளித்திருந்தார் இயக்குனர் சிவா. இப்படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்து அசத்தி இருந்தார். இப்படத்திற்கு பின்னர் அவரை குட்டி நயன் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.

37

இதுதவிர தமிழில் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்து இருந்தார் அனிகா. பின்னர் தமிழின் முதல் ஜாம்பி படமான மிருதனில் நடிகர் ஜெயம் ரவியின் தங்கையாக வந்தார். கடைசியாக இவர் தமிழில் நடித்த படம் மாமனிதன். இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிகா.

47

இப்படி குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு தற்போது வயது 18 ஆகிவிட்டது. இதனால் அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் புட்ட பொம்மா. இது கப்பேலா எனும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் கடந்த வாரம் தான் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... பேபி பிங்க் நிற சேலையில்... புன்னகையால் இளம் நெஞ்சங்களை கட்டி இழுக்கும் மாளவிகா மோகனன்!

57

இதையடுத்து அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ஓ மை டார்லிங். ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனிகா. காதலை மையமாக வைத்து ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.

67

இந்நிலையில், ஓ மை டார்லிங் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் ரிலீசான பின் அனிகாவை பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் இப்படத்தில் லிப்லாக் காட்சிகளில் அசால்டாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிகா.

77

இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், அனிகா, நயன்தாராவையே மிஞ்சிடுவாங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர். சிலரோ டிரைலரிலேயே இத்தனை லிப்லாக் காட்சி என்றால், அனிகா படத்தில் என்னென்ன கவர்ச்சி அட்ராசிட்டி செய்திருக்கிறாரோ என பதிவிட்டு வருகின்றனர். மலையாளத்தில் ஹீரோயினான முதல் படத்திலேயே அனிகா இப்படி நடித்துள்ளது தான் சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்...  மோசடி மன்னனின் காதல் வலையில் சிக்கி கர்ப்பமான பிரபல நடிகை..? கருக்கலைப்பு செய்ததாக பரவும் பகீர் தகவல்

click me!

Recommended Stories