அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்த 'துணிவு' திரைப்படம் நான்காவது வாரமாக பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தன்னுடைய அடுத்த படம் குறித்து தீவிர பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
AK 62 படத்தை, நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கும், லைகா நிறுவனத்திற்கும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால்.. அதிரடியாக இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
அந்த வகையில் இதுவரை அஜித்தின் படத்திற்கு இசையமைக்காத ஒருவரை தான் மகிழ் திருமேனி இப்படத்திற்கு, இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இது குறித்து வெளியாகி உள்ள தகவலின்படி சந்தோஷ் நாராயணன் தான் AK 62 படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை ரஜினிகாந்த் கபாலி, விஜய்யின் பைரவா, போன்ற படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தாலும்... அஜித்தின் ஒரு படத்திற்கு கூட இசையமைத்ததில்லை. எனவே இப்படத்தில் ஒருவேளை சந்தோஷ் நாராயணன் இசையமைத்தால் பாடல்கள் அனைத்தும் படு மாஸாக இருக்கும் என அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.