நடிகை மஞ்சு வாரியர் மலையாள நடிகையாக இருந்தாலும், இவர் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தான். கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டம் புல்லு கிராமத்தை பூர்வீகமாக கொண்ட மஞ்சு வாரியர், மலையாளத்தில் வெளியான 'சாட்சியம்' எங்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மீனாட்சி என்கிற மகள் ஒருவரும் உள்ள நிலையில், திலீப் - மஞ்சு ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இவர்களின் மகள் மீனாட்சி பெரும்பாலும் அவரின் அப்பாவிடம் வசித்து வருவதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பின்பும் தொடர்ந்து தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் மஞ்சு வாரியர் சமீப காலமாக தமிழிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வங்கியில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதை பெற்ற, 'அசுரன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து, தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை வென்றார்.
பரதநாட்டிய கலைஞரான இவர், மேடையில் கோகுலத்து... கிருஷ்ணனாக மாறி ராதையை கொஞ்சி குழவி நடனமாடிய சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.