Horror Movies: பேய் படம்னா இப்படித்தான் இருக்கணுமா!.. யாரும் இறக்காத சிறந்த 8 திகில் திரைப்படங்கள் இதுதான்!

First Published Feb 8, 2023, 6:07 PM IST

யாரும் இறக்காத அதே நேரத்தில் பயமுறுத்தும் திகில் படத்தை பற்றி இங்கு காண்போம்.

திகில் கிளப்பும் பேய் படம் என்றாலே, உங்கள் நியாபகத்துக்கு எது எல்லாம் வரும் தெரியுமா ? அவை அடர்ந்த காடு, முகமூடி அணிந்த மனிதன், விசித்திரமான பேய், ரத்த காட்டேரி இவையெல்லாம் நியாபகம் வரும். ஆனால் எல்லா பயமுறுத்தும் படங்களும் அப்படி இல்லை. அப்படிப்பட்ட டாப் 8 படங்களை பார்க்கலாம்.

ஸ்வால்லோ (2019) - ஹேலி பென்னட் இந்த படத்தில் (Swallow) வீட்டைச் சுற்றி சிதறிக் கிடக்கும் சிறிய உருண்டைகள் மற்றும் பொத்தான்களை சாப்பிடத் தொடங்குகிறாள். இந்த படம் நம்பமுடியாத அதே நேரத்தில், அசௌகரியமான படமாக இது எடுக்கப்படவில்லை. திகிலுக்கு மட்டும் கேரண்டியான படம் இது.

தி பாபடூக் (2014) - ஒற்றைத் தாய் ஒருவர், அவளுடைய மகன் மற்றும் ஒரு தவழும் உயிரினம் ஆகியவற்றுக்கு இடையேயான பிரச்சனைக்குரிய உறவின் கதையைச் சொல்கிறது. அது உண்மையாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். குடும்ப வன்முறையின் பல அத்தியாயங்கள் இருந்தபோதிலும், திரையில் ஒரு மரணம் கூட ஏற்படவில்லை.

போல்டெர்ஜிஸ்ட் (1982) - இயக்குனர் டோப் ஹூப்பரிடமிருந்து வந்த சூப்பரான படம் என்று சொல்லலாம். இதில் வரும் ரத்தம் போன்ற மேக்கப் அக்காலத்தில் அனைவரிடம் பெரும் பாராட்டை பெற்றது. இந்த படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

1408 (2007) -  எழுத்தாளர் மைக் என்ஸ்லின், ஜான் குசாக் என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்தார். டால்பின் ஹோட்டலில் சோதனை செய்கிறார், அங்கு ஆவிகளின் கூட்டங்கள் இருப்பதாக வதந்திகள் வந்தது. ஸ்டீபன் கிங்கின் நாவலின் அடிப்படியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தி கிரீன் நைட் (2021) - கிரீன் நைட் படம் ரத்தங்களை சிதறவிட்டாலும், இதில் யாரும் சாவதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,  எதிரியின் தலை வெட்டப்பட்டாலும் கூட, திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக யாரையும் கொல்லவில்லை என்பதே நிதர்சனம்.

பியர்சிங் (2018) -  ரியு முரகாமியின் ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றப்பட்டது. தி பியர்சிங்கில், கிறிஸ்டோபர் அபோட் நடித்த ஒரு வழக்கமான குடும்ப மனிதரான ரீட் வேட்டையாடுவார். இதில் பாலியல் தொழிலாளி ஜாக்கி, மியா வாசிகோவ்ஸ்கா நடித்தார். மிகவும் குழப்பமான மற்றும் கொடூரமான காட்சிகள் உள்ளன.

தி கன்ஜூரிங் 2 (2016) - ஜேம்ஸ் வானின் படங்கள் பெரும்பாலும் பயங்கரமான திகில் திரைப்படப் பட்டியல்களில் இடம்பிடிக்கின்றது. ஆனால் கான்ஜுரிங் அந்தப்பட்டியலில் இல்லை.

சைன்ஸ் (2002) - மெல் கிப்சன் நடித்த இந்த படத்தில், தெய்வீகம், வேற்றுகிரகவாசி என பலவற்றை கலந்து கட்டி அடித்திருப்பார் இயக்குனர். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் படம் போலவே இருக்கும்.

click me!