வாரிசு நடிகை ராஷ்மிகா ஏற்கனவே பல கோடி செலவழித்து, மும்பையில் லக்சுரி அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து... தற்போது நடிகை சமந்தாவும் மும்பையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றிய பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது, மெல்ல மெல்ல மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் சமந்தா... அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க உள்ள குஷி, மற்றும் பாலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சமந்தா... ராஜ் மற்றும் டிகேவுடன் இணைந்து தன்னுடைய இரண்டாவது இந்தி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
Samantha
இந்த சந்தேகத்தை எழ செய்தது சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரியன் அஸ்தமன காட்சியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதை அவர் தற்போது வாங்கியுள்ள புது அப்பார்ட்மென்டில் இருந்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இ Siasat.com இன் அறிக்கையின்படி, இந்த படம் மும்பையில் உள்ள எந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலிலிருந்தும் எடுக்கப்படவில்லை, மாறாக, அது நகரத்தில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் சமந்தா மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கலாம் என செய்திகள் பரவியது.
இவருக்கு முன்னதாக 'வாரிசு' படத்தின் நாயகி நேஷனல் கிரிஷ் ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகள் கதைவை தட்டுவதால், நட்சத்திர ஓட்டல்களில் தங்க விருப்பம் இல்லாமல் மும்பையில் அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியதாக கூறப்பட்டது. அவரை தொடர்ந்து தற்போது சமந்தாவும் இந்த லிஸ்டில் இணைத்துள்ளார்.