அந்த நாட்கள் எரிமலை போல இருந்தது... சிம்பு உடனான காதல் பிரேக்-அப் ஆனது குறித்து மனம் திறந்த ஹன்சிகா

Published : Feb 09, 2023, 08:33 AM IST

லவ் ஷாதி டிராமா டாக்குமெண்ட்ரியில் நடிகர் சிம்பு உடனான காதல் பிரேக் அப் ஆனது குறித்து மனம்திறந்து பேசி உள்ளார் ஹன்சிகா.

PREV
15
அந்த நாட்கள் எரிமலை போல இருந்தது... சிம்பு உடனான காதல் பிரேக்-அப் ஆனது குறித்து மனம் திறந்த ஹன்சிகா

நடிகை ஹன்சிகாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் 4-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இவர் தனது நீண்ட நாள் காதலனான சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா என்கிற 400 ஆண்டுகள் ப்ழமைவாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமண வீடியோவை லவ் ஷாதி டிராமா என்கிற பெயரில் டாக்குமெண்ட்ரியாக தயாரித்து ஹாட்ஸ்டாரில் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.

25

இதுகுறித்த டீசர் கடந்த மாதம் வெளியாகி வைரல் ஆனது. அதில் தான் சோஹல் கதூரியாவுக்கு இரண்டாவது மனைவியானது குறித்து எமோஷனலாக பேசி இருந்தார். ஹன்சிகாவின் கணவர் சோஹைலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. ஹன்சிகாவின் தோழியை தான் அவர் முதலில் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்திலும் ஹன்சிகா கலந்துகொண்டிருந்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்த பின்னர் ஹன்சிகாவுக்கும் சோஹைலுக்கும் இடையே காதல் மலர்ந்து அது தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... முதல் படத்திலேயே இம்புட்டு லிப்லாக் காட்சியா...! ஹீரோயின் ஆனதும் கவர்ச்சியில் மிரட்டும் குட்டி நயன் அனிகா

35

இந்நிலையில், லவ் ஷாதி டிராமா டாக்குமெண்ட்ரியின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் சிம்பு உடனான காதல் முறிவு குறித்து மனம்திறந்து பேசி உள்ளார் ஹன்சிகா. அதில் அவர் கூறியதாவது : “நான் ஏற்கனவே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது அனைவருக்கும் தெரியும். அதை மீண்டும் செய்ய வேண்டாம் என நினைத்தேன், ஆனால் எதிர்பாராமல் அது நடந்துவிட்டது. ஆனால் இந்த முறை ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் அது திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தேன்” என தெரிவித்துள்ளார்.

45

மேலும் அவர் கூறுகையில், திருமணத்துக்கு முன் 19 நாட்கள் எரிமலை போன்று கொந்தளிப்பான மனநிலையில் தான் இருந்தேன். ஒரு பேப்பரும், பேனாவும் இருந்தால் போதும் அடுத்தவரின் வாழ்க்கையை நாசமாக்கிவிட முடியும் என நம்புகிறார்கள்” என அதில் எமோஷனலாக பேசி கண்கலங்கி உள்ளார் ஹன்சிகா.

55

வாலு படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்தது. பின்னர் இருவருமே தங்களது காதல் குறித்து ஓப்பனாக பேசியபோதும், ஹன்சிகாவின் குடும்பத்தின் இந்த காதலுக்கு ஓகே சொல்லவில்லை. பின்னர் நாளடைவில் அந்த காதல் முறிவை சந்தித்தது. பிரேக்-அப் ஆன பின்னர் சிம்புவும் ஹன்சிகாவும் மஹா என்கிற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்படம் கடந்தாண்டு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஏகே 62 படத்தின் இசையமைப்பாளர் இவரா? பக்கா பிளான் போட்டு மகிழ் திருமேனி தேர்வு செய்தது யாரை தெரியுமா!

Read more Photos on
click me!

Recommended Stories