ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் - இயக்கப்போவது யார் தெரியுமா?

Published : May 08, 2025, 01:05 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் - இயக்கப்போவது யார் தெரியுமா?
Director Lokesh Kanagaraj Turns as Hero

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே மாஸ் வெற்றியை ருசித்த லோகேஷ், அடுத்ததாக கைதி படத்தின் மூலம் எல்.சி.யு என்கிற சினிமேட்டிக் யூனிவர்ஸை உருவாக்கி கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தினார். பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் நட்சத்திர இயக்குனராக மாறிய லோகேஷ், கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்து மோஸ்ட் வாண்டட் இயக்குனராக உருவெடுத்தார்.

24
ஹிட்மேன் லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்தார். அவர் இதுவரை இயக்கிய ஐந்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இதனால் கோலிவுட்டின் அதிக டிமாண்ட் உள்ள இயக்குனராக மாறினார் லோகேஷ். இவர் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கிறார்.

34
ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் கனகராஜ்

கோலிவுட்டில் இயக்குனராக கோலோச்சி வரும் லோகேஷ் கனகராஜ், விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் கடந்த ஆண்டு ஸ்ருதிஹாசன் உருவாக்கிய இனிமேல் என்கிற ஆல்பம் பாடலில் ஸ்ருதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் அவரது நடிப்பை பார்த்த பலரும் வியந்து போயினர். இதனால் அவருக்கு ஹீரோவாக நடிக்க கோலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்பு வந்தது. ஆனால் தனக்கு பிடித்த கதையை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் லோகி.

44
லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கப்போவது யார்?

அந்த வகையில் அவர் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளாராம். இவர் இதுவரை ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கி உள்ளார். தற்போது இளையராஜா பயோபிக்கை இயக்கும் பணிகளில் பிசியாக உள்ளார் அருண் மாதேஸ்வரன். அப்படத்தின் பணிகள் முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories