Leo movie : விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லியோ படப்பிடிப்பில் திடீர் மாற்றம் செய்த லோகேஷ்

Published : Mar 30, 2023, 03:09 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திடீர் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
Leo movie : விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லியோ படப்பிடிப்பில் திடீர் மாற்றம் செய்த லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் லியோ. விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதுமட்டுமின்றி மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி, ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்து வருகிறார்.

24

லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு, அடுத்த கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடத்தியது. இதற்காக கடும் குளிரையும் பொறுட்படுத்தாமல் கடந்த 50 நாட்களுக்கு மேலாக காஷ்மீரில் தங்கி படப்பிடிப்பை நடத்திய படக்குழு கடந்த வாரம் தான் சென்னை திரும்பியது. இதையடுத்து அடுத்தபடியாக சென்னையில் இரண்டு வாரம் ஷூட்டிங்கை நடத்திவிட்டு கிளைமாக்ஸ் காட்சியை ஐதராபாத்தில் படமாக்க திட்டமிட்டு இருந்தனர்.

இதையும் படியுங்கள்... நானியின் ''தசரா'' திரைவிமர்சனம் - மக்கள் கருத்து!

34

ஆனால் தற்போது அந்த பிளானில் திடீர் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி லியோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்துவதற்கு பதில் சென்னையிலேயே நடத்தி முடித்துவிடலாம் என்கிற முடிவுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பிலிம் சிட்டி ஒன்றில் பிரம்மாண்ட செட் அமைத்து அங்கு கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

44

இதற்கு முன் நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஐதராபாத்தில் தான் நடைபெற்றது. இதனால் தமிழ்நாட்டை சேந்த சினிமா தொழிலாளர்களுக்கு வேலைகிடைப்பதில்ல என்று புகாரும் எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு ஐதராபாத்தில் நடைபெறுவதாக இருந்த லியோ படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்திவிட படக்குழு முடிவெடுத்து இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... Pathu Thala Review : ஏஜிஆர்-ஆக அதகளப்படுத்தி... ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா சிம்பு? - பத்து தல விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories