நடிகர் நானி, 'ஷாம் சிங்கராய்' படத்தின் வெற்றிக்குப் பின்னர், நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'தசரா'. நிலக்கரி எடுக்கும் தொழிலாளர்கள் பற்றியும், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனை குறித்தும் இப்படம் பேசியுள்ளது. இதுவரை மிடுக்கான ஸ்டைலிஷ் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ள நானி, இந்த படத்தில் முதல் முறையாக தர லோக்கலாக இறங்கி வேறு லெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் - நாணி இருவரும் ஏற்கனவே, 'நேனு லோக்கல்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது போலவே, 'தசரா' படத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'பத்து தல' படத்திற்கு போட்டியாக, பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் வெளியாகி உள்ள தசரா படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
சில்லு சில்லாய் சிதறிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. கண்ணன் - ஜீவாவை தொடர்ந்து இவரும் வெளியேறுகிறாரா?
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிப்பில் இப்படம் உருவாகி உள்ளது. சத்தியம் சூரியன் ஐ எஸ் இ ஒலிப்பதிவுவில், நவீன் நூலில் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று காலை தன்னுடைய ரசிகர்களுடன் FDFS காட்சியை பார்ப்பதற்காக நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஐதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்குக்கு சென்றனர்.