காந்தாரா சாப்டர் 1 மற்றும் லோகா சாப்டர் 1 ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில், அதற்கு எவ்வளவு வியூஸ் கிடைத்துள்ளது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ஓடிடி தளங்களில் வெளியான படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. லோகா: சாப்டர் 1 சந்திரா, காந்தாரா: சாப்டர் 1, இட்லி கடை போன்ற படங்கள் ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றில் வெளியாகின. இதில் கடந்த அக்டோபர் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு இருந்தது. அதில் லோகா மற்றும் காந்தாரா படங்களுக்கு இடையே தான் கடுமையான போட்டியும் நிலவி இருக்கிறது. எந்தெந்த படங்களுக்கு எவ்வளவு வியூஸ் கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.
24
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள்
அதிக பார்வைகளை பெற்ற படங்களின் பட்டியலில் தனுஷின் இட்லி கடை திரைப்படம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. இதற்கு 20 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. இதையடுத்து நான்காவது இடத்தை ஜான்வி கபூரின் பரம சுந்தரி திரைப்படம் பிடித்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆன அப்படம் 28 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ஓஜி திரைப்படம் பிடித்திருக்கிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆன அப்படம் 30 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
34
காந்தாராவை முந்திய லோகா
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு காந்தாரா சாப்டர் 1 மற்றும் லோகா சாப்டர் 1 ஆகிய இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதில் அதிக வியூஸ் அள்ளி லோகா சாப்டர் 1 திரைப்படம் தான் முதலிடம் பிடித்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன இப்படம் 38 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகி 35 லட்சம் வியூஸ்களை வாரிசுருட்டி ஜஸ்ட் மிஸ்ஸில் முதலிடத்தை நழுவவிட்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களும் அக்டோபர் 31ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் IT: Welcome To Derry என்கிற ஆங்கில வெப் தொடர் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இந்த வெப் தொடர் 8 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. இதையடுத்து தமிழ் வெப் தொடரான போலீஸ் போலீஸ் 10 லட்சம் வியூஸ் உடன் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. மூன்றாவது இடத்தை The Witcher என்கிற ஆங்கில வெப் தொடரின் நான்காவது சீசன் பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 11 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸில் உள்ள குருக்ஷேத்ரா என்கிற வெப் சீரிஸ் 13 லட்சம் வியூஸ் உடன் 2வது இடத்திலும், ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் Mahabharat: Ek Dharmayudh வெப் தொடர் 16 லட்சம் வியூஸ் உடன் முதலிடத்திலும் உள்ளது.