எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தொடர்பான வீடியோ ஆதாரம் தம்மிடம் இல்லை என்று ஜனனி பேசிக் கொண்டிருந்ததை கரிகாலன் ஒட்டுக்கேட்டு விடுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கியதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறி அவரை பிளாக்மெயில் செய்து வைத்திருக்கிறார். நல் வாய்ப்பாக அந்த வீடியோவில் என்ன இருந்தது என்பதை அஸ்வின் மூலம் தெரிந்துகொண்ட ஜனனி, அதை ஆதி குணசேகரனிடம் சொல்லி எஸ்கேப் ஆன கையோடு, அந்த வீடியோவை எப்படியாக மீட்க போராடி வருகிறார். போலீஸ் அதிகாரி கொற்றவை உதவியுடன் வீடியோவை மீட்க ஜனனி முயற்சித்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் எதிர்பாரா ட்விஸ்ட் ஒன்று நடந்து இருக்கிறது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
24
பிசினஸிலும் ஜெயிக்க பிளான் போடும் ஜனனி
வீடியோ மேட்டர் ஒருபுறம் சென்றாலும், தங்களின் தமிழ்ச் சோறு என்கிற பிசினஸையும் தொடங்க முனைப்பு காட்டி வருகிறார்கள் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா. இதனை ஃபுட் டிரக் ஆக ஓபன் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்காக ஃபுட் டிரக் தயார் செய்யும் நிறுவனங்களிடம் கொட்டேஷன் வாங்குகிறார் ஜனனி. இதைப்பார்த்த நந்தினி, வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் நம்மால் பிசினஸில் சாதிக்க முடியுமா சந்தேகத்துடன் கேட்க, நம்ம பிசினஸிலும் ஜெயிக்கனும், இந்த வீட்டு விஷயத்திலும் ஜெயிக்கனும் என துணிச்சல் உடன் பதிலளிக்கிறார் ஜனனி.
34
ஆறுதல் கொடுக்கும் கொற்றவை
இதையடுத்து கொற்றவையை சந்தித்து பேசும் ஜனனி, வீடியோ தொடர்பாக அவரிடம் உதவி கேட்கிறார். அதற்கு அவர் இன்னும் இரண்டு நாட்களில் வீடியோ நம் கையில் கிடைத்துவிடும் என கூறுகிறார். இதனால் சற்று நம்பிக்கை அடையும் ஜனனி, வீட்டுக்கு வந்து இதுபற்றி நந்தினி, ரேணுகா, தர்ஷினி, பார்கவி ஆகியோரிடம் பேசுகிறார். மாடியில் ஒன்றாக நின்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, நம்மிடம் வீடியோ இல்லை என்பது ஆதி குணசேகரனுக்கு எக்காரணத்தை கொண்டும் தெரிந்துவிடக் கூடாது என ஜனனி, சொன்னதை அங்கு வரும் கரிகாலன் ஒட்டுக்கேட்டு விடுகிறார்.
இதனால் இந்த விஷயம் ஆதி குணசேகரனுக்கு தெரியவர அதிகம் வாய்ப்பு உள்ளது. ஜனனி இத்தனை நாள் பொத்தி வச்ச ரகசியம், ஆதி குணசேகரனுக்கு தெரிந்தால், இல்லாத வீடியோவை வைத்து தான் என்னை மிரட்டுனியா என கேட்டு தாண்டவம் ஆடிவிடுவார். மறுபுறம் சக்தியும் தேவகி பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள முடியாமல் திண்டாடி வருகிறார். இதனால் இந்த முறை ஆதி குணசேகரனின் கைதான் ஓங்குகிறது. ஜனனியின் பிளான் ஒட்டுமொத்தமாக சொதப்பியதால், அவரை ஆதி குணசேகரன் வீட்டை விட்டே துரத்தவும் வாய்ப்பு உள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.