சிவனாண்டியும் கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரியை பழி வாங்க எல்லா திட்டமும் போட்டு பார்த்தார், ஆனால், எதுவும் ஒர்க் அவுட்டாகாத நிலையில் இப்போது சாமி சிலையை கடத்த துணிந்துவிட்டார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலில் கடந்த வாரம் கும்பாபிஷேகத்திற்கான வேலைப்பாடுகள் நடந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பத்திரிக்கையும் அடித்து வந்துவிட்டது. அதற்கான பூஜையும் நடந்துவிட்டது. இனி இந்த வாரம் முகூர்த்தக்கால் நடப்பட்டு அதன் பிறகு யாக சாலை பூஜைகள் நடைபெற இருக்கிறது.
23
கார்த்திகை தீபம் 2 சீரியல் கும்பாபிஷேகம்
இந்த நிலையில் தான் கார்த்திக் இந்த கும்பாபிஷேகத்தை நடத்தக் கூடாது என்பதற்காக இப்போது சாமி சிலையை கடத்தியுள்ளார். முதலில் பத்திரிக்கையில் கெமிக்கல் தடவிய நிலையில் பூஜை செய்யும் போது பத்திரிக்கையில் நெருப்பு படும், அதன் பிறகு சாமி குத்தம் என்று சொல்லி எப்படியாவது கும்பாபிஷேகத்தை நிறுத்திவிடலாம் என்று சிவனாண்டியும் அவரது சித்தப்பாவும் பிளான் போட்டார்கள்.
ஆனால், அதனை எப்படியோ கார்த்திக் கண்டுபிடித்து தடுத்து நிறுத்திவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக சாமி சிலையை கடத்திவிட்டார்கள். ஆம், கோயிலில் நடுராத்திரியில் யாரும் இல்லாத போது சாமி சிலையை கடத்தி தனது காரில் வைத்து புறப்பட்டனர். அதோடு கடந்த வாரம் எபிசோடு முடிந்தது. இனி இந்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.