சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2 சீரியல். இதில் கார்த்திக் மற்றும் ரேவதியின் கதாபாத்திரங்கள் தான் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று. என்னதான் தான் ஒரு பணக்காரனாக இருந்தாலும் கார்த்திக்கிற்கு இருக்கும் குணம், பொறுமை யாருக்கும் வராது என்று சொல்லும் அளவிற்கு அப்படியொரு பொறுமைசாலி.
27
கார்த்திக்கை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட ரேவதி
முதலில் கார்த்திக்கை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட ரேவதிக்கு இப்போது கார்த்திக் தான் உலகமே. அவர் தனது அத்தை பையன் என்ற உண்மையை தெரிந்து, 2 குடும்பத்தையும் ஒன்று சேர்க்க வைத்திருப்பது புரிந்து அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டார் ரேவதி. அதன்படி இப்போது கார்த்திக்கை பற்றி புரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். ஆனால், இப்போது அவருக்கு இருக்கும் ஒரே ஒரு கவலை, அவர் யார் என்ற உண்மை தெரிந்தால் சாமுண்டீஸ்வரியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பது தான்.
37
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஒருநாள் இரவில் கார்த்திக் தன்னைப் பற்றிய உண்மையை தனது மாமியார் சாமூண்டீஸ்வரியிடம் கூறியது போன்றும், உடனே அவர் கார்த்திக்கை மரியாதை இல்லாமல் பேசியதோடு மட்டுமின்றி அவரை வீட்டை விட்டு வெளியில் துரத்துவது போன்றும் கனவு கண்டார். அதோடு, கார்த்திக் இல்லாத வீட்டில் தானும் இருக்க மாட்டேன் என்று கூறி அவருடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், இதனை தாங்கிக் கொள்ள முடியாத சாமூண்டீஸ்வரி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வது போன்று கனவு கண்டார்.
47
கார்த்திக் யார் என்ற உண்மை
என்னதான் இது வெறும் கனவாக இருந்தாலும் உண்மையில் இது போன்ற சம்பவம் நடந்து விடக் கூடாது என்ற பயம் ரேவதிக்கு இருக்கத்தான் செய்கிறது. முதலில் கார்த்திக் உண்மையை சொல்வாரா அல்லது தீபாவதி கார்த்திக் யார் என்ற உண்மையை கண்டுபிடிப்பாரா என்பது ரசிகர்களது கேள்வியாக இருக்கும் நிலையில் கார்த்திக் தீபாவதியை சந்தித்து முதலில் தான் யார்? எதற்காக இப்படியெல்லாம் நடிக்கிறேன் என்று புரிய வைத்தால் தீபாவளியால் வரக் கூடிய பிரச்சனை சரியாகும்.
57
சாமூண்டீஸ்வரியின் மனநிலை
அதன் பிறகு முதலில் கும்பாபிஷேகத்தை நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு நேரம் காலம் மற்றும் சாமூண்டீஸ்வரியின் மனநிலை ஆகியவற்றை பார்த்து தான் யார் என்ற உண்மையை கார்த்திக் சொல்லிவிட வேண்டும். அதற்கு சந்திரகலா அவருடன் இருக்க கூடாது. அவர் தவிர்த்து சுவாதி, ரோகிணி, ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் உடனிருந்தால் நன்றாக இருக்கும்.
67
கார்த்திக் மற்றும் ரேவதி
அப்போதுதான் இதுநாள் வரையில் தனது குடும்பத்திற்கும், தங்களுக்கும் நேர்ந்த சம்பவங்கள் பற்றி அதிலிருந்து மீண்டு வந்தது பற்றியும் சாமூண்டீஸ்வரியிடம் எடுத்துச் சொல்ல முடியும். ஒருவேளை சாமூண்டீஸ்வரிக்கு கார்த்திக் ஏமாற்றியது பிடிக்கவில்லை என்றால் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு வந்துவிடலாம். ஏற்கனவே அங்கு துர்கா மற்றும் நவீன் இருவரும் இருக்கும் சூழலில் இப்போது கார்த்திக் மற்றும் ரேவதியும் செல்லலாம். அதன் பிறகு ரோகிணி மற்றும் மயில்வாகனம் இருவரும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
77
சுவாதி மற்றும் ராஜராஜன்
இதைத் தொடர்ந்து சுவாதி மற்றும் ராஜராஜன் இருவரும் வந்துவிடுவார்கள். இறுதியாக சாமூண்டீஸ்வரியும் உண்மையை புரிந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கிடையில் கான்ஸ்டபிள் மொபைல் மட்டும் சாமூண்டீஸ்வரிக்கு கிடைத்தால் அவராகவே உண்மையை தெரிந்து கொள்வார். எது எப்படியோ இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.