இப்போது கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகள் தான் ரசிகர்களுக்கு பேவரைட் என்று சொல்லும் அளவிற்கு காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் முந்தைய எபிசோடில் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான சண்டைக் காட்சிகள் உடன் சீரியல் முடிந்தது. ஆனால், இன்றைய எபிசோடில் அதே காட்சிகள் உடன் தான் சீரியல் தொடங்கப்பட வேண்டும். ஆனால், அப்படி ஏதும் காட்சிகள் தொடங்கப்படவில்லை.