எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியை தாக்கிய ஆதி குணசேகரனை போலீஸில் சிக்க வைக்க அனைவரும் போராடி வரும் நிலையில், தற்போது ஈஸ்வரியின் தந்தை எதிர்பாரா ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கியதற்கான வீடியோ ஆதாரத்தை கண்டுபிடிக்க ஜனனி முழு முனைப்பு காட்டி வருகிறார். மறுபுறம் ஆதி குணசேகரனின் லெட்டரை வைத்துக் கொண்டு அவருக்கு எதிரான ஆதாரத்தை திரட்ட சக்தி இராமேஸ்வரம் கிளம்பி சென்றிருக்கிறார். இதுதவிர ஆதி குணசேகரன் வீடியோவை கைப்பற்றிய புது வில்லன், அவரது வீட்டை விலைக்கு வாங்க பிளான் போட்டு வருகிறார். இதனால் ஆதி குணசேகரன் விரைவில் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய எபிசோடில் எதிர்பாரா ட்விஸ்ட் ஒன்று நடந்திருக்கிறது.
24
செம ட்விஸ்ட்
அதன்படி ஆதி குணசேகரனை பார்க்க வந்த ஈஸ்வரியின் தந்தை, அவரிடம் ஏன் ஆஸ்பத்திரிக்கு சென்று ஈஸ்வரியை பார்க்கவில்லை என கேட்கிறார். அதற்கு அவர், நான் அங்கு சென்றால், அவளை கொல்ல வந்திருப்பதாக பொய் புகார் கொடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்ப, ஜனனி, நந்தினி, சக்தி, ரேணுகா ஆகியோர் பிளான் போட்டிருக்கிறார்கள். அதனால் தான் நான் அங்கு செல்லாமல் இருக்கிறேன் என சொல்கிறார். இடையே குறுக்கிடும் நந்தினி, ஈஸ்வரி அக்கா இந்த நிலைமையில் இருக்க காரணமே இவர் தான் என சொல்ல, அதையெல்லாம் நம்பாத ஈஸ்வரியின் தந்தை, நீ பொய் சொல்ற என சொல்லி ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
34
ஆதி குணசேகரனுக்கு ரூட் கிளியர்
பின்னர் ஆதி குணசேகரனிடம் பேசும் ஈஸ்வரியின் தந்தை, நீங்க என் மகளை காப்பாத்தனும் அது உங்களால மட்டும் தான் முடியும். உங்ககிட்ட பணம் இல்லேனா சொல்லுங்க, என்கிட்ட சொத்து இருக்கு, அதைவித்து தருகிறேன் என சொல்கிறார். எனக்கு அதெல்லாம் வேண்டாம் மாமா என சொல்லும் ஆதி குணசேகரன், இவளுங்க யாரும் என் பொண்டாட்டி ஈஸ்வரி விஷயத்துல தலையிடக் கூடாது என கண்டிஷன் போடுகிறார். மேலும் அவளை நல்லபடியா கொண்டு வந்து சேர்க்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என ஆதி குணசேகரன் கூற, ஈஸ்வரியின் தந்தையும் அந்த பொறுப்பை நான் உங்களிடம் கொடுத்துவிடுகிறேன் என சொல்கிறார்.
இதை கேட்டு டென்ஷன் ஆன தர்ஷன், என்ன தாத்தா பேசுற நீ என எகிறி வர, டேய் நீ எனக்கு பேரனே இல்லை என ஈஸ்வரியின் தந்தை கூறிவிடுகிறார். பெத்த தாயை நினைச்சு நீ கவலைப்படுற மாதிரியே தெரியலையே, புது கல்யாணம் பண்ணிட்டு ஜோரா இருக்க என கொக்கரிக்கிறார். இதையெல்லாம் கேட்டு நந்தினி பதற்றமடைகிறார். ஈஸ்வரியின் தந்தை கொடுத்த எதிர்பாரா ட்விஸ்டால், இனி ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ வந்தாலும் அதனால் குணசேகரனுக்கு எந்த ஆபத்தும் வராது என்பது போல் தெரிகிறது. அடுத்த என்னென்ன ட்விஸ்டெல்லாம் காத்திருக்கிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.