ரோகிணியை தலையில் தூக்கிவைத்து ஆடும் விஜயா... முத்துவிடம் உண்மையை உடைத்த மீனா - சிறகடிக்க ஆசை அப்டேட்

Published : Nov 01, 2025, 11:01 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா மூலம் தான் ரோகிணிக்கு மிகப்பெரிய ஆர்டர் கிடைத்தது என்கிற உண்மை முத்துவுக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு கலா என்கிற பில்டர் மூலம் அவர் புதிதாக கட்டியுள்ள அபார்ட்மெண்ட்டிற்கு பூ சப்ளை செய்யும் ஆர்டர் கிடைக்கிறது. அங்குள்ள 275 வீடுகளுக்கும் மீனா தான் பூ கொடுக்க வேண்டும் என சொல்லும் கலா, தான் அந்த வீடுகளை ஹோம் அப்ளையன்ஸ் உடன் கஸ்டமர்களுக்கு டெலிவரி செய்ய இருப்பதாக சொல்ல, அதற்கு மீனா, தன்னுடைய மைத்துனர் ஹோம் அப்ளையன்ஸ் கடை வைத்திருக்கும் விஷயத்தை சொல்லி, அந்த ஆர்டரை அவர்களுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என கேட்க, அதற்கு கலாவும் விசிடிங் கார்டு கொடுத்து அவர்களை நேரில் சந்திக்க சொல்கிறார். பின்னர் மீனா ரோகிணியிடம் விசிடிங் கார்டு கொடுத்து சந்திக்க சொல்ல, அவரும் சந்தித்து அந்த ஆர்டரை கன்பார்ம் செய்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

24
விஜயாவுக்கு ரோகிணி மீது வந்த திடீர் பாசம்

மீனாவிடம் இந்த ஆர்டம் உங்கள் மூலம் வந்து தெரியவேண்டாம் என கேட்டுக் கொண்ட ரோகிணி, விஜயாவிடம் சென்று, தானே இந்த ஆர்டரை கஷ்டப்பட்டு வாங்கியது போல் பில்டப் பண்ண, விஜயாவும் அது உண்மை என நினைத்து ரோகிணியை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். தன் மருமகள் 40 லட்ச ரூபாய் ஆர்டர் பிடித்து வந்திருப்பதாகவும், அவருக்காக காபி போட்டு கொடு என மீனாவிடம் ஆர்டர் போடுகிறார் விஜயா. இதனால் டென்ஷன் ஆன முத்து, அவ உங்களுக்கு மட்டும் தான் காபி போடுவா, அவங்களுக்கு வேணும்னா அவங்களையே போட்டுக்க சொல்லுங்க என சொல்வதோடு மீனாவுக்கு கிடைத்துள்ள ஆர்டர் பற்றியும் பேசுகிறார்.

34
கோடீஸ்வரி ஆகப்போகும் மீனா

மீனாவுக்கும் 275 வீட்டுக்கு பூ போடும் ஆர்டர் கிடைத்துள்ளது என கூறும் முத்து. அதில் ஒரு வீட்டுக்கு தினசரி 20 ரூபாய் லாபம் வைத்தாலும் ஒரு நாளைக்கு 5 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். அதுவே ஒரு மாசத்துக்கு கணக்கு போட்டால் 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய். அதுவே ஒரு வருஷத்துக்கு 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். இப்படி பார்த்தால் அடுத்த 5 ஆண்டுகளில் மீனாவுக்கு 1 கோடி லாபம் கிடைக்கும். அதுவே இவங்க கொடுக்கும் ஹோம் அப்ளையன்ஸ் ஒரு முறை மட்டுமே வாங்குவார்கள். அதில் அவர்களுக்கு 40 லட்சம் தான் கிடைக்கிறது. இவர்கள் 1 கோடி சம்பாதிப்பதற்குள் மீனா சம்பதித்துவிடுவார் என முத்து சொன்னதும் வாயடைத்துப் போகிறார் விஜயா.

44
முத்துவுக்கு தெரியவரும் உண்மை

பின்னர் ரோகிணியை தனியாக அழைத்து பேசும் ஸ்ருதி, உங்களுக்கு மீனா மூலமாக தானே இந்த ஆர்டர் கிடைத்தது, நீங்களே கஷ்டப்பட்டு வாங்குனது மாதிரி பேசுறீங்க என கேட்க, அதற்கு ரோகிணி, மீனா சொல்லி இருந்தாலும் அந்த கலா மேடம் எனக்கு ஏற்கனவே தெரிந்தவர். அவங்க வீட்டு பஃங்ஷனுக்கு நான் மேக் அப் போட்டிருக்கேன் என சொல்லி முட்டு கொடுக்கிறார். பின்னர் இரவில் முத்துவிடம் பேசும் மீனா, தன் மூலம் தான் ரோகிணிக்கு இந்த ஆர்டர் கிடைத்த விஷயத்தை சொல்கிறார். மேலும் இதை யாரிடமும் சொல்லாதீங்க எனவும் கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories