எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் புது வில்லனுக்கு ஓவர் பில்டப் கொடுத்து, இறுதியில் அவர் முகத்தை காட்டாமலேயே அனுப்பிவிட்டாலும், அவரால் இனி வரும் எபிசோடுகளில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன், அவரது மனைவி ஈஸ்வரியை தாக்கியதில் அவர் தலையில் காயமடைந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார். ஈஸ்வரியை குணசேகரன் தாக்கியதற்கான வீடியோ ஆதாரம் ஈஸ்வரியின் செல்போனில் இருந்ததை கண்டுபிடித்த அறிவுக்கரசி, அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ஆதி குணசேகரனை மடக்க பிளான் போட்டார். ஆனால் அந்த வீடியோ அவருக்கே எமனாக மாறி, கெவின் என்கிற போட்டோகிராஃபர் கையில் சிக்கியது. அந்த கெவினை கொலை செய்த குற்றத்திற்காக தற்போது அறிவுக்கரசி, சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
25
காவு வாங்கும் வீடியோ
கெவின் இறக்கும் முன் அந்த வீடியோ ஆதாரத்தை அஸ்வினிடம் கொடுத்திருந்தார். இதை அறிந்த ஜனனி, அதை அஸ்வினிடம் இருந்து வாங்க பிளான் போட்டார். ஆனால் அந்த அஸ்வின் பணத்துக்கு ஆசைப்பட்டு அதை புது வில்லன் ஒருவரிடம் கொடுத்துவிட்டார். பணத்தை கொடுத்த கையோடு, சில நாட்களிலேயே அந்த அஸ்வினையும் சுட்டுக் கொன்றுவிட்டார் அந்த புது வில்லன். இதனால் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் கையில் இல்லாமல் தவித்து வருகிறார் ஜனனி. இருப்பினும் அந்த வீடியோவில் என்ன இருந்தது என்பதை சாகும் முன் அஸ்வின் சொன்னதால், அதை ஆதி குணசேகரனிடம் சொல்லி அவரிடம் இருந்து தப்பித்தார் ஜனனி.
35
ஜனனிக்கு 15 நாள் டைம் கொடுத்துள்ள குணசேகரன்
15 நாட்களுக்குள் அந்த வீடியோ ஆதாரத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஜனனியிடம் டீல் பேசி இருக்கிறார் ஆதி குணசேகரன். இந்த கேப்பில் ஆதி குணசேகரனின் வீட்டிற்கே வந்த புது வில்லன், அவர் வீடு அமைந்திருக்கும் பகுதியில் ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்ட இருப்பதாகவும், அதற்காக அந்த வீட்டை விலை பேச வந்திருப்பதாகவும் தன்னுடைய உதவியாளரிடம் சொல்லி அனுப்ப, யார் இடத்துல வந்து யார் கிட்ட பேரம் பேசுற என அந்த நபரை தர தரவென இழுத்துச் சென்று கதிர் வெளியே துரத்திவிடுகிறார்கள். இதனால் அந்த புது வில்லனும் பிரச்சனை பண்ணாமல் அந்த இடத்தைவிட்டு கிளம்பிச் செல்கிறார்.
புலி போல் பில்டப் கொடுத்துவிட்டு, அந்த வில்லன் எதுவும் அலப்பறை செய்யாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. புலி பதுங்குவதே பாய்வதற்கு தான் என சொல்வார்கள். அதன்படி, அந்த புது வில்லனும் பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். ஓட்டல் கட்டுவதற்காக டீசண்டாக வந்து டீல் பேசியவர்களை ஆதி குணசேகரன் அவமானப்படுத்தி துரத்திவிட்டதால், இனி தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார் அந்த புது வில்லன். அவர் கைவசம் ஆதி குணசேகரன் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. அதை வைத்து ஆதி குணசேகரனை அவர் மிரட்ட வாய்ப்பு இருக்கிறது.
55
ஆதி குணசேகரனுக்கு காத்திருக்கும் ஆப்பு
தனக்கு வீட்டை எழுதிக் கொடுக்காவிட்டால், உன்னுடைய வீடியோவை போலீஸில் ஒப்படைத்துவிடுவேன் என அந்த புது வில்லன் மிரட்ட வாய்ப்பு உள்ளது. சொத்தை விட மானம் தான் பெருசு என முடிவெடுத்து ஆதி குணசேகரன் அந்த வீட்டை அவர்களுக்கு எழுதிக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், அந்த புது வில்லன் ஜனனி உடன் சேர்ந்து பிளான் போட்டு ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பவும் வாய்ப்புகள் இருக்கிறது. இவற்றில் எது நடந்தாலும் ஆப்பு ஆதி குணசேகரனுக்கு தான். அதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி.