எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய உண்மைகளை கண்டறிய இராமேஸ்வரம் போயிருக்கும் சக்தியை போட்டுத்தள்ள சூழ்ச்சி நடக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனிடம் கோயம்புத்தூர் செல்வதாக கூறிவிட்டு சக்தி இராமேஸ்வரத்துக்கு சென்றிருக்கிறார். ஆதி குணசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த லெட்டர் சக்தி கையில் சிக்கிய நிலையில், அதில் ஆதி குணசேகரனுக்கு சாபம்விட்டு எழுதிய தேவகி என்கிற பெண்ணை தேடி தான் இராமேஸ்வரம் சென்றுள்ளார் சக்தி. அங்கு சென்று ஒவ்வொரு இடமாக அந்த பெண்ணை பற்றி விசாரிக்கிறார். அனைவரும் தெரியாது என சொல்ல, ஒருவர் மட்டும் இதை ரிட்டயர்டு போஸ்ட் மேன் ஒருவரிடம் சென்று விசாரிக்குமாறு கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
சக்திக்கு ஆதி குணசேகரனால் வரும் ஆபத்து
அந்த ரிட்டயர்டு போஸ்ட் மேனை பார்க்க சக்தி, இராமேஸ்வரம் கோவில் அருகே சென்று விசாரிக்கிறார். சக்தி கோவைக்கு செல்லவில்லை, இராமேஸ்வரம் தான் சென்றிருக்கிறான் என்பது ஆதி குணசேகரனுக்கு தெரிந்ததால், அவர் அங்கிருக்கும் தன ஆள் ஒருவனை அனுப்பி, சக்தியை பாலோ பண்ண சொல்கிறார். அந்த நபரும் சக்தியை பாலோ பண்ணி சென்று, அவர் லெட்டரை காட்டி ஒவ்வொருவரிடம் விசாரித்து வருவதாக ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு சொல்கிறார். அதற்கு அவர், அளவுக்கு மீறி போச்சுனா அவனை அங்கயே முடிச்சு விட்ரு என சொல்கிறார். இதனால் சக்தியின் உயிருக்கு ஆபத்து வரும் சூழல் உருவாகி இருக்கிறது.
34
அஸ்வின் வீட்டுக்கு செல்லும் ஜனனி
மறுபுறம் ஜனனி, தர்ஷினி உடன் அஸ்வின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சென்று வீடியோ பற்றி ஏதாவது தெரியவருமா என்பதை விசாரிக்க செல்கிறார். ஆட்டோவில் செல்லும்போது சக்தியிடம் போன் போட்டு பேசுகிறார் ஜனனி, அப்போது தான் இங்கு அட்ரஸ் தேடி அலைவதாக சக்தி சொல்ல, தாங்களும் அஸ்வின் வீட்டுக்கு செல்லும் விஷயத்தை சொல்கிறார் ஜனனி. அதுமட்டுமின்றி, ஓட்டல் கட்டுவதாக கூறி, ஒரு தொழிலதிபர் வீட்டை பேரம் பேச வந்த விஷயத்தை சக்தியிடம் கூறுகிறார். இதையடுத்து ஜனனியை பத்திரமாக சென்று வருமாறு கூறிவிட்டு, போனை கட் பண்ணி விடுகிறார் சக்தி.
ஜனனி வீட்டில் இல்லாத நேரத்தில் தர்ஷனுக்கு போன் போடும் அன்புக்கரசி, அவனிடம் மன்னிப்பு கேட்டு, பாசமாக பேசுவது போல் நடிக்க, இதனால் பார்கவியும் குழப்பமடைகிறார். தனக்கும் பார்கவிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தவே அன்புக்கரசி இதுபோன்று செய்வதாக கூறி அவரது ரூமுக்கு சென்று சண்டைபோட முயலும் தர்ஷனை தடுத்து நிறுத்தும் ஆதி குணசேகரன், நீ என் மகனே இல்லை. ஒழுங்கா வீட்டை விட்டு வெளிய போயிரு என சொன்னதும் மனமுடைந்து போகிறார் தர்ஷன். இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.