டிரெஸ்ஸை அயர்ன் பண்ணவும், சமையல் செய்யவும் சொன்ன செந்தில் – கோபமடைந்த மீனா!

Published : Nov 03, 2025, 03:00 PM IST

Meena and Senthil Fight : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அலுவலகத்தில் அதிக வேலை பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு செல்லாமல் மாமியார் வீட்டிற்கு வந்த மீனாவிற்கும் செந்திலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

PREV
15
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்னதான் தனக்கு விருப்பமே இல்லை என்றாலும் கணவரின் கட்டாயத்திற்காக மீனா தனிக்குடித்தனம் வந்தார். ஆனால், அன்று முதல் இன்று வரை வேண்டா வெறுப்பாக அரசு கொடுத்த விடுதியில் தங்கியிருக்கிறார். மேலும், தனது கணவர் ஆடம்பர செலவுகள் செய்வதையும் விரும்பவில்லை. ஒருபுறம் தனது கணவரால் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் உடனே வந்துவிடுவார் என்று மீனா தனக்கு தானே ஆறுதல்படுத்திக் கொண்டாலும் உண்மையில் அவருக்கு நன்கு தெரியும், என்னவென்றால் செந்தில் எல்லாம் மீண்டும் அப்பாவின் வீட்டிற்கு வர மாட்டார்.

25
கதிர் அண்ட் ராஜீ

செந்திலுக்கு அவருடைய மாமனார் மற்றும் மாமியார் ஆறுதலாக இருக்கும் நிலையில் மீனாவிற்கு அவரது மாமனார் மற்றும் மாமியார் தான் ஆறுதலாக இருக்கிறார்கள். எப்படா தனது மாமியார் வீட்டிற்கு போவோம், அவரது கையால் சாப்பிடுவோம் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மீனாவிற்கு அலுவலகத்தில் அதிக வேலை இருந்ததால் அவர் இரவு தனது மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கு வடை, சிக்கன் என்று விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

35
செந்தில் அண்ட் மீனா

அப்போது மீனாவிற்கு போன் போட்ட செந்தில் சட்டையை அயர்ன் பண்ண சொல்லியுள்ளார். அதோடு சமையல் செய்து வைக்க செய்துள்ளார். இதையெல்லாம் விரும்பாத மீனா தனது கணவர் இங்கேயே இருக்க சொல்லிவிட்டார் என்று மாமியாரிடம் பொய் சொல்லிவிட்டார். இதைத் தொடர்ந்து அம்மாவிற்கு போன் போட்டு பேசிய செந்தில் உடனே புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்துவிட்டார்.

45
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

அப்போது மீனாவிற்கும், செந்திலுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தனது மாமியாரிடம் செந்தில் இங்கு இருக்க சொல்லவில்லை என்ற உண்மையை மீனா சொல்லிவிட்டார். பின்னர் செந்தில் தனது அண்ணன், தம்பி மற்றும் மாமாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு முட்டை பொரியல் செய்து அனைவரும் சாப்பிட்டனர்.

16 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோன் நடித்த முதல் தெலுங்கு படம் எது தெரியுமா?

55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இப்படியொரு அழகான வீட்டை வைத்துக் கொண்டு மீனா அங்கேயே இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறாள் என்று செந்தில் சொல்ல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அண்ணா. உனக்கு தனியாக இருக்க வேண்டும் என்று ஆசை, ஆனால், அண்ணிக்கு குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஆசை என்று கூறியுள்ளார். இதோடு செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் முடிவுக்கு வந்தது.

மகனில் பெயரோடு... பர்த் சர்டிபிகேட்டை வெளியிட்டு மாதம்பட்டியை வெறுப்பேற்றும் ஜாய்!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories