வா வாத்தியார்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த படம் வா வாத்தியார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படம் திரையரங்கில் அட்டர் பிளாப் ஆன நிலையில், இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. ஜனவரி 28-ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டேக் தட் (ஆவணத் தொடர்)
பிரிட்டனின் புகழ்பெற்ற பாய் பேண்ட் 'டேக் தட்' பயணத்தை இந்த மூன்று பாக ஆவணப்படம் காட்டுகிறது. அவர்களின் 35 வருட வெற்றி, கருத்து வேறுபாடுகள், மீண்டும் இணைந்தது என அனைத்தும் இதில் உள்ளது. 90களின் இசை பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த விருந்து. இந்த ஆவணத் தொடர் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 27 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
பிரிட்ஜெர்டன் – சீசன் 4 (பகுதி 1)
இந்த சீசனில் பெனடிக்ட் பிரிட்ஜெர்டனின் காதல் கதை இடம்பெறுகிறது. ஒரு முகமூடி விழாவில் அவர் சந்திக்கும் சோஃபி பேக்கின் கதைதான் முக்கியம். கற்பனை மற்றும் யதார்த்தம் என்ற கருப்பொருளுடன் இந்த சீசன் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. காதல், டிராமா விரும்பிகளுக்கு இது கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர். இந்த வெப் சீரிஸ் நெட்ஃபிக்ஸில் ஜனவரி 29 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.