ஜன நாயகனுக்கு முன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஜய் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

Published : Mar 25, 2025, 01:22 PM IST

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
14
ஜன நாயகனுக்கு முன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஜய் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

Pongal Release Movies of Thalapathy Vijay : தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர்தான். இவருக்கு ஒரு படத்திற்கு ரூ.275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இப்படி படத்தில் அதிக சம்பாதித்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு அரசியலில் குதிக்க உள்ளார் விஜய். அவர் நடிப்பில் உருவாகும் ஜன நாயகன் தான் தன்னுடைய கடைசி படம் என்று நடிகர் விஜய், கடந்த ஆண்டே அறிவித்துவிட்டார்.

24
Jana Nayagan

ஜன நாயகன் திரைப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய்யின் கடைசி படம்  என்பதால் ஜன நாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையான ஜன நாயகன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... போஸ்டருடன் ஜன நாயகன் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு ; அரசியல் பிரச்சார பிளானா?

34
Jana Nayagan Vijay

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நடிகர் விஜய்யின் 15வது படம் ஜன நாயகன். இதற்கு முன்னர் அவர் நடித்து பொங்கல் பண்டிகைக்கு 14 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அதில் முதன்முதலில் அவர் நடித்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படம் கோயம்பத்தூர் மாப்பிள்ளை. இப்படம் கடந்த 1996-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து 1997ம் ஆண்டு பொங்கலுக்கு காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படமும், 2000ம் ஆண்டு கண்ணுக்குள் நிலவு திரைப்படமும் ரிலீஸ் ஆகி இருந்தது.

44
vijay Pongal Release movies

பின்னர் 2001-ம் ஆண்டு பிரெண்ட்ஸ், 2005-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி, 2006-ல் ஆதி, 2007-ம் ஆண்டு போக்கிரி, 2009-ம் ஆண்டு வில்லு, 2011-ம் ஆண்டு காவலன், 2012-ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய நண்பன், 2014-ல் ஜில்லா, 2017-ம் ஆண்டு பைரவா, 2021-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் மாஸ்டர், மற்றும் கடைசியாக விஜய் நடித்து 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன வாரிசு ஆகிய படங்களுடன் தற்போது ஜன நாயகன் படமும் லேட்டஸ்டாக இணைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... Jana Nayagan: மிகப்பெரிய தொகைக்கு 'ஜனநாயகன்' ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்!

Read more Photos on
click me!

Recommended Stories