South Indian Actor's Dubai Party : ஹிந்தி உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்திருக்கும் இந்த நடிகர் தற்போது மற்றொரு ‘சாதனை’ செய்துள்ளார். இந்த ‘சாதனை’யை கொண்டாட துபாயில் ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்தாராம். தனது துறையில் உள்ள பெரிய மனிதர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பார்ட்டி நடத்தி உள்ளார். இந்த நடிகரின் பார்ட்டி பற்றி திரையுலகில் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அந்த நடிகர் செய்த சாதனை என்னவென்று கேட்கிறீர்களா? அவருக்கு தேசிய விருது, மாநில விருது, சர்வதேச விருது என எதுவும் கிடைக்கவில்லை. அப்புறம் என்ன என்று தானே யோசிக்கிறீர்கள்... அவர் செய்த சாதனையைக் கேட்டால் நீங்களல்ல, மற்ற மொழித் திரையுலகமே அதிர்ச்சியாகும்.
தனது திரை வாழ்க்கையில் சுமார் 3000 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துள்ளாராம் அந்த நடிகர். ஆச்சரியம், வியப்பு, அதிர்ச்சி எதுவாக இருந்தாலும் இது பொய்யான செய்தி அல்ல. தனது ஹீரோயிசத்தைப் பயன்படுத்தியே ஹீரோயின்கள், துணை நடிகைகளை படுக்கைக்கு வரவழைத்து சுகம் அனுபவித்த இந்த நடிகர், பெண்களை மயக்குவதையே சாதனையாக கருதி அதை கொண்டாடியுள்ளார். இவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் தங்கள் அதிர்ஷ்டம் மாறும் என்று நம்பி சிலர் ஏமாந்து இருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி, அவருடன் திரையில் தோன்றுவதே பெரும் பாக்கியம் என்று நினைக்கும் நூற்றுக்கணக்கான நடிகைகளும் இருக்கிறார்கள்.
இந்திய சினிமா துறையில் ஹீரோயின்களை படுக்கைக்கு அழைப்பது ஒன்றும் புதிதல்ல. நீ ஒத்துழைத்தால் வாய்ப்பு என்ற அதிகாரப்பூர்வமற்ற விதி எல்லா திரையுலகிலும் உள்ளது. இது ஒருவித பேக்கேஜ் சிஸ்டம் என கூறப்படுகிறது.